ஓம் பிர்லா அறைக்குச் சென்று காங்கிரஸ் எம்.பி.க்கள் அச்சுறுத்தல்: கிரண் ரிஜிஜு
எதிர்க்கட்சியினரால் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வேதனையடைந்திருப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பேச்சு
எதிர்க்கட்சியினரால் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வேதனையடைந்திருப்பதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுடன் கிரண் ரிஜிஜு பேசுகையில், "மக்களவைத் தலைவர் அறைக்குள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 முதல் 25 எம்.பி.க்கள் நுழைந்து, அவரிடம் முறையற்றவாறு நடந்து கொண்டனர். நானும் அங்குதான் இருந்தேன். பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் இருந்தனர்.
அவைத் தலைவர் மிகவும் மென்மையான மனிதர். இல்லையெனில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.
Advertisement
Advertisement
தான் பேசுவதற்கு எவருடைய அனுமதியும் தேவையில்லை என்று ராகுல் காந்தி கூறினார். யாருடைய அனுமதியும் இல்லாமல், தன்னுடைய விருப்பம்போல் பேசுவேன் என்றும் ராகுல் கூறினார்.
ஆனால், தலைவர் அனுமதியின்றி, அவையில் உறுப்பினர்கள் எவரும் பேச முடியாது. பிரதமர்கூட அனுமதியுடன் மட்டுமே பேச முடியும். அனைவரும் அனுமதியுடன்தான் பேசுகிறார்கள்.
ராகுல் காந்திக்கு என்னால் பாடமெடுக்க முடியாது. அவர் எந்த உலகில் வாழ்கிறார் என்பது புரியவில்லை. அவர் எந்தக் கொள்கைகளால் இயங்குகிறார்?
நாடாளுமன்றம் இப்படி செயல்பட முடியாது என்று அவருக்கு காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் விளக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
Congress MPs went to the Speaker's chamber and abused him, says Union Parliamentary Affairs Minister Kiren Rijiju
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.