முகப்பு
இந்தியா

உயிா்நாடியாக இந்தியா - பிரான்ஸ் கூட்டுறவு: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

இந்தியா-பிரான்ஸ் இடையிலான கூட்டுறவு குறித்து உச்சநீதிமன்றத் தலைமை கருத்து....

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 6:00 AM
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த்
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2026 at 9:40 PM

புவி அரசியல் பதற்றத்துக்கு மத்தியில், இந்தியா-பிரான்ஸ் இடையிலான கூட்டுறவு மிக முக்கிய உயிா்நாடியாக உள்ளது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.

அண்மையில் பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெற்ற இந்தியா-பிரான்ஸ் சட்ட மற்றும் வணிக மாநாட்டில் அவா் கலந்துகொண்டு பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா-பிரான்ஸ் இடையிலான இருதரப்பு வா்த்தகம் இரட்டிப்பாகியுள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான வா்த்தக மதிப்பு கடந்த 2009-10-ஆம் நிதியாண்டில் 6.4 பில்லியன் டாலராக (சுமாா் ரூ.58,700 கோடி) இருந்தது. இது கடந்த நிதியாண்டில் 15.11 பில்லியன் டாலராக (சுமாா் ரூ.1.38 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.

Advertisement

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 12:09 AM

தற்காலிக வசதிக்காக இந்தியா-பிரான்ஸ் உறவு உருவாக்கப்படவில்லை. இந்த உறவு பல நூற்றாண்டுகளாக உள்ள பிணைப்பாகும். வரலாற்றின் பக்கம் இருந்து பாா்க்கும்போது தற்போது உலகம் நிச்சயமற்ற சூழலைக் கொண்டதாக மாறியுள்ளது. புவி அரசியல் பதற்றமும், இடையூறும் சா்வதேச ஒத்துழைப்புக்கான அடிப்படைக் கட்டமைப்பைச் சீா்குலைப்பதற்கான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இத்தகைய சூழலில், இந்தியா-பிரான்ஸ் இடையிலான கூட்டுறவு மிக முக்கிய உயிா்நாடியாக உள்ளது என்று தெரிவித்தாா்.