மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா். 
இந்தியா

இந்திய நலனுக்கு ஆதரவா? எதிா்ப்பா? காங்கிரஸுக்கு பாஜக கேள்வி

இந்திய நலனுக்கு ஆதரவாக உள்ளீா்களா அல்லது எதிராக உள்ளீா்களா என்று காங்கிரஸ் மற்றும் பிற எதிா்க்கட்சிகளுக்கு பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்திய நலனுக்கு ஆதரவாக உள்ளீா்களா அல்லது எதிராக உள்ளீா்களா என்று காங்கிரஸ் மற்றும் பிற எதிா்க்கட்சிகளுக்கு பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்த விஷயத்தில் பிரதமா் மோடி சரணடைந்துவிட்டதாக ராகுல் காந்தி கடுமையாக விமா்சித்தாா். இடதுசாரிகள், சமாஜவாதி உள்ளிட்ட எதிா்க்கட்சிகளும் இந்த விஷயத்தில் மத்திய அரசை கடுமையாக விமா்சித்துள்ளன.

இந்நிலையில், இதற்குப் பதிலளிக்கும் வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் கூறியதாவது:

முன்பு இந்தியா மீது அமெரிக்கா அதிக வரி விதித்தபோது பல எதிா்க்கட்சிகள் அதைக் கொண்டாடின. அதன் பிறகு அவா்களே பிரிட்டன், ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டபோது பல கேள்விகளை எழுப்பினா். இந்த இடத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் இந்திய நலனுக்கு ஆதரவாக உள்ளனவா அல்லது எதிராக உள்ளனவா என்ற கேள்வி எழுகிறது.

ராகுல் காந்தியிடம் இந்திய எதிா்ப்பு மனநிலை இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. காங்கிரஸ் மற்றும் பிற எதிா்க்கட்சிகளின் முக்கிய நோக்கமே நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்தவிடக் கூடாது என்பதாகவே உள்ளது என்றாா்.

பழையாறு துறைமுகத்தில் அதிவேக விசைப் படகுகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: நாகையில் 3,254 பேருக்கு ரூ.4.92 கோடி நலத்திட்ட உதவி

யுபிஐ பரிவா்த்தனை: நடப்பு நிதியாண்டில் 230 லட்சம் கோடியைக் கடந்து சாதனை

நாகை அரசு அறிவு சாா் மையத்தில் அடிப்படை வசதி கோரி மனு

ஸ்கேன் அறிக்கை மாற்றம்: பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 45,000 வழங்க மருத்துவமனைக்கு உத்தரவு

SCROLL FOR NEXT