முகப்பு
இந்தியா

பிப். 14ல் வாக்குச்சாவடி ஊழியர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

பாஜக வலுவான அடிமட்டத்தை வலியுறுத்துவது பற்றி..

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 12:18 PM
பிரதமர் மோடி - பிடிஐ
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14-ல் அசாம் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அசாமில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக 100 இடங்களை வெல்ல வேண்டும் என்ற லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது. அந்தவகையில் தனது நிலையை மேலும் வலுத்தப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.

இந்த உத்தியின் ஒரு பகுதியாகப் பிரதமர் நரேந்திர மோடி பிப். 14 அன்று குவாஹாட்டிக்குப் பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் அசாம் முழுவதிலும் இருந்து வாக்குச்சாவடி நிலை ஊழியர்கள் பங்கேற்கும் மாபெரும் மாநாட்டில் அவர் உரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாக்குச்சாவடி நிலை ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இது கட்சியின் வலுவான அடிமட்டத்தை எடுத்துக்காட்டுகிறது.

Advertisement

கூடுதலாக, பிப். 21 அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அசாம் செல்லவுள்ளார். அவரது வருகையின்போது, ​​உள்துறை அமைச்சர் முக்கிய அமைப்பு ரீதியான கூட்டங்களை நடத்துவார், தேர்தல் ஆயத்தப் பணிகளை மதிப்பாய்வு செய்வார். மேலும், பாஜகவின் பிரசார உத்தியை வலுப்படுத்தக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் வருகைகள் கட்சித் தொண்டர்களுக்கு ஆற்றலையும், தெளிவான வழிகாட்டுதலையும் வழங்கும் என மூத்த கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

அசாம் முழுவதும் வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் வலுவான அமைப்பு ரீதியான செயல்பாடுகளுக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதை பாஜக நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தாண்டு இறுதியில் அசாமில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. அதில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக, காங்கிரஸுக்கு எதிராகத் தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முயல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

summary

The Bharatiya Janata Party (BJP) has set an ambitious target of winning 100 seats in Assam, signalling a strong and determined push to further consolidate its position in the state.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments