அமெரிக்காவுக்கு அடிமையாக இருக்கிறார் பிரதமர் மோடி! - பிரியங்கா காந்தி கடும் தாக்கு!
அசாமில் பாஜக குறித்து பிரியங்கா காந்தி விமர்சனம்...
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவின் அடிமையாக இருக்கிறார் என காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
அசாமில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் புதன்கிழமை (ஏப். 1) அன்று பேசிய பிரியங்கா காந்தி, அசாமின் வளங்கள் அனைத்தையும் ஒரேயொரு குடும்பம் கொள்ளையடித்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுபற்றி, அவர் பேசியதாவது:
Advertisement
Advertisement
“அசாமில் உள்ள அனைத்தையும் ஒரேயொரு குடும்பம் கொள்ளையடித்து வருகிறது. சுரங்கங்கள், நிலங்கள் உள்ளிட்ட அனைத்தும் பெரும் தொழிலதிபர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
இரட்டை என்ஜின் அரசைக் கொடுத்துள்ளதாக பாஜகவினர் கூறுகின்றனர். ஆனால், உண்மையில் அது இரட்டை அடிமை அரசாகவுள்ளது. பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அடிமைப்பட்டு இருக்கிறார். அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா மோடியின் அடிமையாக இருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், அரசின் திட்டங்களில் இருந்து பெயரை நீக்கி விடுவோம் என மிரட்டி பெண்களை பிரதமர் மற்றும் அசாம் முதல்வரின் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க கட்டாயப்படுத்துவதாகவும், பாஜக தலைமையிலான அரசு அனைத்து துறைகளிலும் ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
Priyanka Gandhi, a senior Congress leader and Member of Parliament, has criticized Prime Minister Narendra Modi, stating that he is a slave to the United States.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.