மாயாவதி 
இந்தியா

இந்தியாவின் நலனுக்காக அமெரிக்கா வரியைக் குறைக்கும் என சொல்ல முடியாது: மாயாவதி

புதிய வரி ஒப்பந்தம் குறித்து மாயாவதி கூறுவது..

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்கா 18 சதவீத வரியை நிர்ணயித்திருப்பது நாட்டின் நலனுக்குத்தான் என்று முன்கூட்டியே மதிப்பிட முடியாது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் திங்கள்கிழமை தொலைபேசியில் உரையாடிய பிறகு, இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து மாயாவதியின் இந்தக் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

இதுதொடர்பாக மாயாவதியின் எக்ஸ் தள பதிவில்,

புதிய ஒப்பந்தத்தின் கீழ், இந்தியப் பொருள்களுக்கான பரஸ்பர வரியான மொத்தம் 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்துப் பதிலளித்த மாயாவதி, போதுமான விவரங்கள் இல்லாமல் உடனடியாக மதிப்பீடுவது அவசரமான செயல்.

இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே, அதன் உண்மையான தாக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கு இடையே பல்வேறு நிபந்தனைகளுடன் பரஸ்பர ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட பிறகு, அமெரிக்கா 18 சதவீத வரியை விதித்திருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

இது நாட்டிற்கும், மக்களுக்கும் நலம் பயக்குமா என்பதைப் பற்றி முழுமையான தகவல்கள் இல்லாத நிலையில் அவசரமாக மதிப்பிட முடியாது.

இது நாட்டையும், குறிப்பாக பகுஜன்கள், ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பெண்களையும் எந்த அளவிற்குப் பாதிக்கும் என்பது நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே தெளிவாகத் தெரியும் என்று அவர் கூறினார்.

இதுதொடர்பாக நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விரிவாக விளக்கியிருந்தால், மக்களுக்குத் துல்லியமான மற்றும் தெளிவான தகவல்கள் பெற உதவியாக இருந்திருக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Bahujan Samaj Party supremo Mayawati on Tuesday said it would be premature to determine if the United States' decision to set an 18 per cent tariff on Indian goods is in the interest of the country, noting that complete details of the agreement are not yet available.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடாவில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு! 3 இந்தியர்கள் கைது!

எப்ஸ்டீன் கோப்புகள், அதானி வழக்கு! அமெரிக்காவுக்கு அஞ்சும் மோடி! - ராகுல் காந்தி

அமெரிக்க குடியுரிமை சட்டத்தை விமர்சித்த பாடகி..! கிராமி விருது விழாவில் சர்ச்சை!

கோலங்கள் தொடருக்குப் பிறகு எதிர்நீச்சலில் திருமுருகனுடன் இணையும் நடிகர்!

திமுகவை வீழ்த்தும் வேலையை மட்டும் விஜய் பார்க்கட்டும்! - டிடிவி தினகரன்

SCROLL FOR NEXT