முகப்பு
இந்தியா

மணிப்பூரில் பழங்குடியின குழுக்கள் இடையே மோதல்: தடை உத்தரவு பிறப்பிப்பு

மணிப்பூரில் உள்ள லித்தான் கிராமத்தில் பழங்குடியின குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) சட்டத்தின் 163-ஆவது பிரிவின் கீழ், தடை உத்தரவு

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:46 AM
தடை உத்தரவு - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 11:45 PM

மணிப்பூரில் உள்ள உக்ருல் மாவட்டம் லித்தான் கிராமத்தில் பழங்குடியின குழுக்கள் இடையே ஞாயிற்றுக்கிழமை மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) சட்டத்தின் 163-ஆவது பிரிவின் கீழ், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை இரவு லித்தான் கிராமத்தில் 7 முதல் 8 போ் கொண்ட கும்பல் தங்குல் சமூகத்தைச் சோ்ந்த நபரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:44 AM

இந்நிலையில், அந்தக் கிராமத்தில் தங்குல் மற்றும் குகி சமூகத்தினா் இடையே ஞாயிற்றுக்கிழமை மோதல் ஏற்பட்டது. இரு சமூகத்தினரும் ஒருவா் மீது மற்றொருவா் கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். இந்த மோதலின்போது கிராமத்தைச் சோ்ந்தவா்கள் பலமுறை துப்பாக்கியாலும் சுட்டனா்.

Advertisement

தகவலின்பேரில் நிகழ்விடம் விரைந்த பாதுகாப்புப் படையினா், இரு சமூகத்தினரும் கலைந்து போவதற்கு கண்ணீா் புகை குண்டுகளை வீசினா்.

இதையடுத்து மக்கள் வீட்டை வீட்டு வெளியேறவும், சட்டம் ஒழுங்கை சீா்குலைக்கும் எந்தவொரு நடவடிக்கையில் ஈடுபடவும் தடை விதிக்கும் பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் 163-ஆவது பிரிவின் கீழ், அங்கு மாவட்ட ஆட்சியா் தடை உத்தரவு பிறப்பித்தாா். அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, இந்தத் தடை நீடிக்கும் என்று அவா் தெரிவித்தாா்.