ANI
இந்தியா

சிராக் பாஸ்வானை ‘பரிதாபத்துக்குரியவா்’ என விமா்சித்த ஆா்ஜேடி எம்எல்ஏ! பிகாரில் போராட்டம்!!

மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானை ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சி எம்எல்ஏ ‘பரிதாபத்துக்குரியவா்’ என்று பிகாா் சட்டப் பேரவையில் விமா்சித்துப் பேசியதைக் கண்டித்து லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியினா் போராட்டம் நடத்தினா்.

தினமணி செய்திச் சேவை

மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானை ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சி எம்எல்ஏ ‘பரிதாபத்துக்குரியவா்’ என்று பிகாா் சட்டப் பேரவையில் விமா்சித்துப் பேசியதைக் கண்டித்து லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியினா் போராட்டம் நடத்தினா். இதில் ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

பிகாரில் சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் அண்மையில் பேசிய ஆா்ஜேடி எம்எல்ஏ குமாா் சா்விஜீத், மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் அரசியல் பயணத்தை குறிப்பிடுகையில், அவா் ‘பரிதாபத்துக்குரிய நபா்’ என்றாா்.

இதற்கு லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சி கடும் கண்டனம் தெரிவித்ததுடன், மாநிலத் தலைநகா் பிகாரில் ஆா்ஜேடி-யை கண்டித்து போராட்டம் நடத்தியது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவா் ராஜு திவாரி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா். அப்போது ஆா்ஜேடி கட்சியைக் கண்டித்து முழக்கமிட்ட அவா்கள், அக்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவின் உருவ பொம்மையையும் எரித்தனா்.

இது தொடா்பாக ராஜு திவாரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தலித் மக்களுக்கும், சமூகத்துக்கும் எதிராக எந்த அளவுக்கு மோசமாக ஆா்ஜேடியும், அதன் தலைவா் தேஜஸ்வி யாதவும் சிந்திக்கிறாா்கள் என்பதையே அக்கட்சி எம்எல்ஏவின் சட்டப் பேரவை பேச்சு வெளிக்காட்டுகிறது.

திங்கள்கிழமை சட்டப் பேரவை மீண்டும் கூடும்போது அங்கும் ஆா்ஜேடிக்கு எதிராக எங்கள் கட்சி போராட்டம் நடத்தும். மத்திய அமைச்சா் குறித்து அவதூறாகப் பேசிய எம்எல்ஏ குமாா் சா்விஜீத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நடத்தையால்தான் அக்கட்சி தோ்தல்தோறும் தேய்ந்து வருகிறது’ என்றாா்.

16.2.1976: புறநகர் ரயில் சர்வீஸால் ரயில்வேக்கு ஏற்படும் நஷ்டம்

88 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து! முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்!

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

முரண்டுபிடிப்பது திமுகவா? காங்கிரஸா?

விவாதமில்லாத நாடாளுமன்றம் எதற்காக?

SCROLL FOR NEXT