கைது 
இந்தியா

போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஒடிஸாவில் கைது: 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர்

ஒடிஸாவைச் சேர்ந்த மாநிலங்களுக்கு இடையேயான போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனை தில்லி காவல் துறையினர் கைது செய்ததாக அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தினமணி செய்திச் சேவை

ஒடிஸாவைச் சேர்ந்த மாநிலங்களுக்கு இடையேயான போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனை தில்லி காவல் துறையினர் கைது செய்ததாக அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: ஒடிஸாவைச் சேர்ந்த மனோஜ் கில்லோ, 2022- ஆம் ஆண்டு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போதைப் பொருள் தொடர்பான வழக்கில் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவரைக் கைது செய்வதற்கு வழிவகுத்த தகவல்களுக்கு ரூ.50,000 வெகுமதியும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பிப்.13-ஆம் தேதி மாலை 5.20 மணியளவில் கில்லோவை அவரது கிராமத்திற்கு அருகிலுள்ள பகுதியில் காவல் துறையினர் கைதுசெய்தனர். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த கில்லோ, ஒடிஸாவிலிருந்து தில்லி மற்றும் தேசியத் தலைநகர் வலயம் (என்சிஆர்) உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக சிறப்புப் பிரிவுக்கு குறிப்பிட்ட தகவல்கள் கிடைத்தது.

மூன்று மாதங்களுக்கும் மேலாக ஒரு போலீஸ் குழு ரகசியக் கண்காணிப்பில் ஈடுபட்டு அவரது நடமாட்டத்தைக் கண்காணித்தது. ஒடிஸாவின் பல்வேறு இடங்களுக்கு பல குழுக்கள் அனுப்பப்பட்டன. கிராமத்தில் அவர் இருப்பது குறித்த குறிப்பிட்ட தகவல்களைச் சேகரித்த பிறகு, அவர் கைது செய்யப்பட்டார்.

ஆயுதச் சட்டம், போதைப் பொருள் மற்றும் மனநோய்க்கு எதிரான பொருள்கள் (என்டிபிஎஸ்) சட்டம், கலால் சட்டம் மற்றும் பிற குற்றங்களுக்காக தில்லி மற்றும் ஒடிஸாவில் குற்றஞ்சாட்டப்பட்ட மனோஜ் கில்லோ மீது ஆறுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

அக்டோபர் 2025-இல், கில்லோ தனது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக ஒடிஸா உயர்நீதிமன்றத்தில் இருந்து 21 நாள்களுக்கு இடைக்கால ஜாமீன் பெற்றார்.

இருப்பினும், ஜாமீன் காலம் முடிந்த பிறகு, அவர் கோராபுட் சிறை அதிகாரிகளிடம் சரணடையத் தவறி தலைமறைவானார்.

பின்னர், இரண்டு வழக்குகளில் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன.

இந்தப் போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தத்தை தமிழக அரசு முடிவுக்குக் கொண்டு வர வலியுறுத்தல்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 130 பேரிடம் ரூ. 1.50 கோடி மோசடி: இளைஞா் கைது

சீன தொழிலதிபருடன் ரகசிய சந்திப்பு: பெரு அதிபர் ஜோஸ் ஜெரி பதவி நீக்கம்

ஷிவம் டுபே அதிரடி: இந்தியா வெற்றி

தவிர்ப்போம் நெகிழியை...

SCROLL FOR NEXT