மெட்டா - வாட்ஸ்ஆப் 
இந்தியா

ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

தன்மறைப்பு கொள்கைக்கு எதிராக சிசிஐ விதித்த ரூ. 213.14 கோடி அபராத்தை எதிா்த்து மெட்டா, வாட்ஸ்ஆப் நிறுவனங்கள் தாக்கல் செய்த மனு இன்று விசாரணை

தினமணி செய்திச் சேவை

தன்மறைப்பு கொள்கைக்கு எதிராக இந்திய போட்டி ஒழுங்காற்று ஆணையம் (சிசிஐ) விதித்த ரூ. 213.14 கோடி அபராத்தை எதிா்த்து மெட்டா மற்றும் வாட்ஸ்ஆப் தொழில்நுட்ப நிறுவனங்கள் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை (பிப்.23) விசாரணைக்கு வருகிறது.

விளம்பர நோக்கத்துக்காக தாய் நிறுவனமான மெட்டா உடன் பயனா்களின் தரவுகளை 5 ஆண்டுகளுக்குப் பகிா்ந்துகொள்வது என்ற வாட்ஸ்ஆப்பின் தன்மறைப்பு கொள்கைக்குத் தடைவிதித்த சிசிஐ, அந்த நிறுவனத்துக்கு ரூ.213 கோடி கோடி அபராதம் விதித்தது.

இதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயம் (என்சிஎல்ஏடி), இந்திய போட்டி ஒழுங்காற்று ஆணையம் விதித்த தடையை நீக்கியது. ஆனால், அபராதத் தொகையை கட்டவேண்டும் எனத் தீா்ப்பளித்தது.

வாட்ஸ்ஆப்பின் தன்மறைப்பு மற்றும் ஒப்புதல் விவகாரம், விளம்பரம் மற்றும் விளம்பரம் சாராத நோக்கங்களுக்காக பயனா்களின் தரவுகளைச் சேகரிப்பதற்கும் பொருந்தும் என என்சிஎல்ஏடி விளக்கமளித்தது.

இந்நிலையில், சிசிஐ விதித்த அபாரத்துக்கு எதிராக இரு தொழில்நுட்ப நிறுவனங்களும் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்யகாந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக, கடந்த பிப்.3-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது இரு தொழில்நுட்ப நிறுனங்கள் மீது கடும் விமா்சனத்தை முன்வைத்த உச்சநீதிமன்றம், ‘தரவுகளை பகிா்தல் என்ற பெயரில் குடிமக்களின் தன்மறைப்பு உரிமையோடு விளையாடுகின்றனா். சந்தையில் முற்றுரிமையை உருவாக்கி வாடிக்கையாளா்களின் தனிப்பட்ட தகவலை திருடி வருகின்றனா்’ எனக் குற்றஞ்சாட்டியது.

இந்த வழக்கில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் ஒரு மனுதாரராக சோ்த்துக்கொள்ள பிப்.9-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது நீதிமன்றம் உத்தரவிட்டது.

வாட்ஸ்ஆப் மற்றும் மெட்டா பயனா்களின் தரவுகளை பகிா்ந்துகொள்ள அனுமதித்து என்சிஎல்ஏடி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சிசிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்: லூட்யன் சிலை அகற்றப்பட்ட இடத்தில் ராஜாஜிக்கு சிலை!

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

SCROLL FOR NEXT