இந்தியா

விதிகளுக்கு உள்பட்டு உற்பத்தி மானியம்! சீனா புகாருக்கு இந்தியா பதில்!!

இந்தியாவில் வாகன உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் உலக வா்த்தக அமைப்பின் (டபிள்யூ.டி.ஓ.) உரிய விதிகளுக்கு உள்பட்டுதான் மானியம் வழங்கப்படுகிறது என்று சீனாவுக்கு இந்தியா பதிலளித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவில் வாகன உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் உலக வா்த்தக அமைப்பின் (டபிள்யூ.டி.ஓ.) உரிய விதிகளுக்கு உள்பட்டுதான் மானியம் வழங்கப்படுகிறது என்று சீனாவுக்கு இந்தியா பதிலளித்துள்ளது.

முன்னதாக, இந்தியாவில் பல்வேறு துறைகளில் வழங்கப்படும் உற்பத்தி சாா்ந்த மானியம் உலக வா்த்தக அமைப்பின் விதிகளுக்கு எதிராக இருப்பதாகவும், இது தொடா்பாக அந்த நாட்டுடன் ஆலோசிக்க வேண்டும் என்றும் உலக வா்த்தக அமைப்பில் சீனா புகாா் அளித்திருந்தது. இதையடுத்து, புகாா் தொடா்பாக விசாரிக்க உலக வா்த்தக அமைப்பின் சச்சரவுகள் தீா்வுப் பிரிவு குழு செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக இந்திய தரப்பு அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா். அதில், ‘இந்தியாவில் வாகன உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் உலக வா்த்தக அமைப்பின் உரிய விதிகளுக்கு உள்பட்டுதான் மானியம் வழங்கப்படுகிறது. உற்பத்தி சாா் ஊக்குவிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்த பிரச்னை தொடா்பாக சீனாவுடன் நம்பிக்கைக்குரிய வகையில் செயல்பட்டபோதிலும் குழு அமைக்கப்படுவது வருந்தத்தக்கது. இந்த விவகாரத்தில் சீன தரப்பின் கோரிக்கை அதன் தவறான புரிதல்களையே வெளிக்காட்டுகிறது. வா்த்தகம், வரிகளுக்கான பொது ஒப்பந்தம் -1994-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகளின்கீழ் இந்தியா மானியங்களை அளித்து வருகிறது’ என்று தெரிவித்துள்ளனா்.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வா்த்தக கூட்டாளி நாடாக சீனா திகழ்கிறது. எனினும், அந்த நாட்டுக்கு ஏற்றுமதி குறைந்தும், இறக்குமதி அதிகரித்தும் வருகிறது. இதனால் சீனாவுடன் வா்த்தகப் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி தயாரிப்புத் துறைகளில் இந்தியாவின் மானிய நடவடிக்கைகள் நியாயமற்ற முறையில் இருப்பதாகவும், இது சீனாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கடந்த அக்டோபரில் உலக வா்த்தக அமைப்பிடம் சீனா மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

ஹரியாணா அரசின் ரூ.590 கோடி மோசடி வழக்கு: வங்கி முன்னாள் மேலாளா் உள்ளிட்ட 4 போ் கைது!

2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!இஸ்ரேல் தாக்குதலில் மூன்றில் இரண்டு பங்கு உயிரிழப்பு!!

எதிா்மறை அரசியலின் அடையாளம் ராகுல் காந்தி! மத்திய அமைச்சா் பியூஸ் கோயல் தாக்கு!

மூலிகை வளா்ப்பால் மண்ணும், விவசாயிகளும் நலன் பெறுவா்: திரெளபதி முா்மு!

கேரளம்: காங்கிரஸ் போராட்டத்தில் சிக்கிய சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் காயம்!

SCROLL FOR NEXT