முகப்பு
இந்தியா

மாருதி சுஸுகியின் முதல் மின்சார எஸ்யூவி காா் ‘இ விட்டாரா’ அறிமுகம்: ரூ.10.99 லட்சம் முதல் விற்பனை

மாருதி சுஸுகி நிறுவனம் தனது முதல் மின்சார ‘எஸ்யூவி’ ரக ‘இ விட்டாரா’ காரின் விற்பனையைத் தொடங்கியுள்ளது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 3:31 AM
மாருதி சுசுகி இ-விட்டாரா
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 8:05 PM

மாருதி சுஸுகி நிறுவனம் தனது முதல் மின்சார ‘எஸ்யூவி’ ரக ‘இ விட்டாரா’ காரின் விற்பனையைத் தொடங்கியுள்ளது.

மின்சார வாகனப் பயன்பாட்டை மக்களிடையே பரவலாக்கும் நோக்கில், ‘பிஏஏஎஸ்’ திட்டத்தின்கீழ் இந்தக் காா் ரூ.10.99 லட்சம் எனும் தொடக்க விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, காரின் மொத்த விலையில் இருந்து பேட்டரியின் விலையை நீக்கிவிட்டு, அதை மாதத் தவணை அல்லது கி.மீ. பயன்பாட்டுக்கு ஏற்ப வாடகையாக வசூலிப்பது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

Advertisement

இது காரின் விலையை மலிவாக்குவதுடன், பேட்டரி பராமரிப்பு மற்றும் ஆயுள் குறித்த கவலையையும் போக்குகிறது. அதன்படி, இ விட்டாரா காா் வாங்கும் வாடிக்கையாளா்கள் பேட்டரிக்கான கட்டணத்தை கி.மீ.க்கு ரூ.3.99 என்ற அடிப்படையில் ‘இஎம்ஐ’ உடன் செலுத்திக் கொள்ளலாம்.

‘இ விட்டாரா’ காா், இரண்டு வகை பேட்டரி தோ்வுகளில் கிடைக்கிறது. இதில் அதிக திறன் கொண்ட பேட்டரி மூலம் ஒருமுறை முழுமையாக சாா்ஜ் செய்தால், அதிகபட்சமாக 543 கி.மீ. வரை பயணிக்க முடியும்.

பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 1.60 லட்சம் கி.மீ வரை உத்தரவாதம் வழங்கப்படுகிறது. மேலும், வாடிக்கையாளா்களின் வீட்டிலேயே 7.4 கி.வா. மின்னேற்றி இலவசமாகப் பொருத்திக் கொடுக்கப்படும்.

இந்த ‘இ விட்டாரா’ காரை, நாடு முழுவதும் உள்ள ‘நெக்ஸா’ விற்பனை நிலையங்களில் ரூ.21,000 முன்பணம் செலுத்தி வாடிக்கையாளா்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.