துரந்தர் படத்தின் காட்சி.  படம்: எக்ஸ் / ஜியோ ஸ்டூடியோஸ்.
இந்தியா

துரந்தர் திரைப்படத்திற்கு லடாக்கில் வரி விலக்கு..! காரணம் என்ன?

லடாக்கில் வரி விலக்கு அளிக்கப்பட்ட துரந்தர் திரைப்படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படத்திற்கு லடாக்கில் வரி விலக்கு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை லடாக் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநர் கவிந்தர் குப்தா அறிவித்துள்ளார்.

எதிர்ப்பும் ஆதரவும்

ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான துரந்தர் திரைப்படம் கடந்த டிச.5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

வளைகுடா நாடுகளில் இந்தப் படம் தடைசெய்யப்பட்ட நிலையில் இந்தியாவில் மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது.

பாகிஸ்தான் நாட்டிற்கு ஒற்றனாகச் செல்லும் ரன்வீர் சிங்கின் நடிப்பு படத்தின் உருவாக்கம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

வலதுசாரி சிந்தனை, பிரிவினை வாதம் தூண்டுவதாக சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்தன. நடிகர் ஹிருத்திக் ரோஷனும் இந்தப் படத்தின் அரசியல் குறித்து தனக்கு விருப்பமில்லை எனக் கூறியது சர்ச்சையானது.

வசூல் வேட்டை

கடந்த டிச. 29ஆம் தேதி வரைக்கும் மட்டுமே உலக அளவில் இந்தப் படம் ரூ.1,100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்தப் படம் இந்தியாவில் மட்டும் இன்றுவரை ரூ.784.50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. விரைவில் இந்தியாவிலேயே ரூ. 1,000 கோடியை எட்ட வாய்ப்பிருக்கிறது.

துரந்தர் பட போஸ்டர்

லடாக்கில் வரி விலக்கு...

இந்நிலையில், லடாக்கின் துணைநிலை ஆளுநர் அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

பாலிவுட் திரைப்படமான ‘துரந்தர்’ படத்துக்கு லடாக்கில் வரி விலக்கு அளிக்கப்படுவதாக துணைநிலை ஆளுநர் கவிந்தர் குப்தா அறிவித்துள்ளார்.

லடாக்கில் விரிவாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தினால் லடாக் சினிமாட்டிக் அனுபவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இயக்குநருக்கு ஆதரவு தெரிவிக்கவும் மேலும் இங்கு அதிகமானோர் படப்பிடிப்பு நடத்த ஊக்குவிக்கவும் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

Ranveer Singh-starrer "Dhurandhar" was on Friday declared tax-free in the Union Territory by the Lieutenant Governor of Ladakh, Kavinder Gupta.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திகார் சிறையில் உள்ள உமர் காலிதுக்கு கடிதம் எழுதிய நியூயார்க் மேயர்! பாஜக கண்டனம்!

தஞ்சை தமிழ்ப் பல்கலை. இணையதளத்தில் எம்ஜிஆர் பெயர், படம் நீக்கம்: இபிஎஸ் கண்டனம்

வார பலன்கள் - மீனம்

இந்திய வரலாற்றில் சவாலான நேரங்களில் துணிச்சலுடன் செயலாற்றியவர் ராம்நாத் கோயங்கா: சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு

வார பலன்கள் - கும்பம்

SCROLL FOR NEXT