Photo Credit: Dharampal Singh X
இந்தியா

உ.பி.: பிறந்த நாள் கொண்டாடிய மறு நாள் மாரடைப்பால் காலமான பாஜக எம்எல்ஏ

உத்தரப் பிரதேசத்தில் பிறந்த நாள் கொண்டாடிய மறு நாள் மாரடைப்பால் பாஜக எம்எல்ஏ ஷியாம் பிஹாரி லால் காலமானார்.

இணையதளச் செய்திப் பிரிவு

உத்தரப் பிரதேசத்தில் பிறந்த நாள் கொண்டாடிய மறு நாள் மாரடைப்பால் பாஜக எம்எல்ஏ ஷியாம் பிஹாரி லால் காலமானார்.

உத்தரப் பிரதேச மாநிலம், பாரேலி மாவட்டம், ஃபரீத்பூர் தொகுதியின் பாஜக எம்எல்ஏ ஷியாம் பிஹாரி லால். பிலிபிட் சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் வெள்ளிக்கிழமை மாரடைப்பால் காலமானார்.

மாரடைப்பு ஏற்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, அமைச்சர் தரம்பால் சிங்குடன் நடந்த கூட்டத்தில் ஷியாம் பிஹாரி கலந்து கொண்டிருந்தார். கூட்டத்தின்போது, ​​அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அங்கு அவர் மாரடைப்பால் காலமானார். ஷியாம் பிஹாரி நேற்று தனது 60ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.

எம்எல்ஏ ஷியாம் பிஹாரி மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

BJP MLA Dr Shyam Bihari Lal from Faridpur in Bareilly died on Friday after suffering a heart attack.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜன. 5-இல் அரசு கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடக்கம்

5.39 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு

ஏற்றுமதி ஊக்குவிப்பு: ரூ.7,295 கோடிக்கு இரு திட்டங்கள் அறிவிப்பு

பிரிந்து வாழும் மனைவி மீதான கணவரின் நிதி ஆதிக்கத்தைக் கொடூர குற்றமாகக் கருத முடியாது: உச்சநீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீா் உள்ளூா் கிரிக்கெட்டில் பாலஸ்தீன கொடியுடன் விளையாடிய இளைஞா்: காவல் தீவிர துறை விசாரணை

SCROLL FOR NEXT