திருவனந்தபுர உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்ற பாஜகவின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் ஜன.11 ஆம் தேதி கேரள மாநிலத்துக்குச் செல்கிறார்.
கேரளத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், அம்மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் 50 இடங்களில் வெற்றி பெற்று முதல்முறையாக பாஜக தலைமையில் மாநகராட்சி நிர்வாகம் அமைகின்றது.
இந்த நிலையில், பாஜகவின் வெற்றி கொண்டாட்ட விழாவில் பங்கேற்பதற்காக, வரும் ஜன.11 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திருவனந்தபுரம் வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே, திருவனந்தபுரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி விரைவில் வருவார் எனக் கூறப்படும் நிலையில், அவரது வருகைக்கு முன்பாக உள்துறை அமைச்சரின் பயணம் அமைந்துள்ளது.
இந்தப் பயணத்தில், திருவனந்தபுரத்தில் நடத்தப்படும் மிகப் பெரியளவிலான விழாவில் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக பிரதிநிதிகள், நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் ஆகியோரை அமைச்சர் அமித் ஷா சந்தித்து உரையாடுவார் எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.