இந்தியா

காசோலை மோசடி வழக்குகளில் வாட்ஸ்ஆப், மின்னஞ்சலில் சம்மன்: உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் அனுமதி

காசோலை மோசடி வழக்குகளில் வாட்ஸ்ஆப், மின்னஞ்சல் (இ}மெயில்) மூலமாகவும் அழைப்பாணை (சம்மன்) அனுப்ப உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

காசோலை மோசடி வழக்குகளில் வாட்ஸ்ஆப், மின்னஞ்சல் (இ}மெயில்) மூலமாகவும் அழைப்பாணை (சம்மன்) அனுப்ப உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் காசோலை மோசடி வழக்குகள் பெருமளவில் நிலுவையில் உள்ளன. நீதித் துறைக்குப் பெரும் சுமையாக உள்ள இவ்வழக்குகளில் விசாரணையை விரைவுபடுத்தும் வகையில் வாட்ஸ்ஆப், மின்னஞ்சல் மூலம் அழைப்பாணை அனுப்புதல் உள்பட பல்வேறு புதிய நடைமுறைகளுக்கு அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

அதனடிப்படையில், உத்தரகண்ட் உயர்நீதிமன்றத் தலைமை பதிவாளர் யோகேஷ் குமார் குப்தா ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: உத்தரகண்ட் மின்னணு நடைமுறை விதிகள்-2025இன்கீழ், காசோலை மோசடி வழக்குகளில் வழக்கமான வழிமுறையுடன் வாட்ஸ்ஆப் போன்ற கைப்பேசி தகவல் பரிமாற்ற செயலிகள், மின்னஞ்சல் வாயிலாகவும் அழைப்பாணை அனுப்பலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புகார் பதிவு செய்யும்போது, குற்றஞ்சாட்டப்படும் நபரின் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்ஆப் எண் விவரங்களையும் புகார்தாரர் வழங்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள்! எங்கிருந்து இயக்கப்படும்? முழு விவரம்!

மேட்டூர் அணை நிலவரம்!

SCROLL FOR NEXT