ஒடிசாவில் 3 மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது... ENS
இந்தியா

ஒடிசாவில் ஒரே நாளில் 3 நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஒடிசாவில் 3 நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ஒடிசாவில், மூன்று மாவட்ட நீதிமன்றங்களுக்கு இன்று (ஜன. 8) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவின் சம்பால்பூர், தியோகார் மற்றும் கட்டாக் ஆகிய மாவட்ட நீதிமன்றங்களுக்கு இன்று மதியம் 2.35 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் ஒடியா மொழியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்த நீதிமன்றங்களில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, மோப்ப நாய்களின் உதவியுடன் நீதிமன்றங்களின் வளாகங்கள் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சேதனைகளில் சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்காததினால் இந்த மிரட்டல்கள் அனைத்தும் போலியானவை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டாக்கில் உள்ள ஒரிசா உயர் நீதிமன்றத்திலும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில், நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நீதிமன்றப் பணிகள் அனைத்தும் சில மணிநேரங்களுக்கு முடங்கியுள்ளன. இதனால், இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி அறிவுறுத்தியுள்ளார்.

In Odisha, bomb threats were issued today (Jan. 8) via email to three district courts.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலைகளில் கலையும் கனவுகள்

புகையில்லா போகி: குடியாத்தம் நகராட்சி நிா்வாகம் வேண்டுகோள்

பகுதி நேர நியாயவிலைக் கடை திறப்பு

மூலதன ஆதாயக் கணக்குத் திட்டம்: கேவிபி அறிமுகம்

வந்தவாசி அருகே கருணாநிதி பளிங்குச் சிலை: அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்தாா்

SCROLL FOR NEXT