கோப்புப் படம் 
இந்தியா

82 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா

சென்னை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட 82 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட 82 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரயில் நிலையங்களில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

கடற்கரை-தாம்பரம் புகா் பிரிவு மற்றும் அனைத்து பறக்கும் ரயில் நிலையங்கள் உள்பட 59 முக்கிய ரயில் நிலையங்களில் ஏற்கெனவே கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது கூடுதலாக, 82 ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில், சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி, ஜோலாா்பேட்டை, அரக்கோணம் ஆகிய வழித்தடங்களில் உள்ள ரயில் நிலையங்கள், பொன்னேரி, எண்ணூா், திருத்தணி, அம்பத்தூா், ஆவடி, திருவள்ளூா் உள்ளிட்ட நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வம் மாயா ரூ.125 கோடி வசூல்! ஓடிடியில் எப்போது?

மழையால் கைவிடப்பட்ட போட்டி..! பிளே-ஆஃப்க்கு தேர்வான முதல் அணி!

பராசக்தி முதல் நாள் வசூல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கானா வினோத் பெற்ற சம்பளம் இவ்வளவா?

திமுக ஆட்சியில் மக்கள் அதிருப்தி: நிதின் நபின்

SCROLL FOR NEXT