மனித உரிமைக் குழுக்கள் போராட்டம் 
இந்தியா

பாகிஸ்தானில் இந்து விவசாயி சுட்டுக் கொலை! மனித உரிமைக் குழு போராட்டம்!

பாகிஸ்தானில் இந்து விவசாயி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதிகோரி மனித உரிமைக் குழுக்கள் போராட்டம்

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தானில் இந்து விவசாயி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதிகோரி மனித உரிமைக் குழுக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சர்ஃபராஸ் நிஸாமனி என்பவரின் நிலத்தை இந்து விவசாயியான கைலாஷ் கோலி குத்தகைக்கு எடுத்திருந்தார்.

இந்த நிலையில், கைலாஷை நிஸாமனி சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நிலப் பிரச்னைதான கொலைக்கான காரணம் என்று கூறப்பட்டாலும், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.

இதனிடையே, கைலாஷின் கொலையைக் கண்டித்து, பாகிஸ்தானில் இந்து சிறுபான்மை அமைப்பினரும் மனித உரிமைக் குழுக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

நிஸாமனியை கைது செய்ய வேண்டும் என்றும், உயிரிழந்த கைலாஷின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும், "கைலாஷின் ரத்தம் நம் அனைவரிடமும் நீதியைக் கோருகிறது. இது ஒரு தனிநபரின் கொலை மட்டுமல்ல; மனிதநேயம், நீதி, சிந்துவில் உள்ள சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு மீதான தாக்குதல்" என்று கூறினர்.

Pakistan: Protests Continue In Sindh Over Killing Of Hindu Farmer Kailash Kolhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக ஆட்சியில் மட்டுமே வளர்ச்சி சாத்தியம்: அமித் ஷா

தமிழ் அடையாளத்திற்கு முன்பு வேறு எந்த அடையாளமும் நிற்க முடியாது: துணை முதல்வர் உதயநிதி

சோம்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

நியூசிலாந்து பேட்டிங்: 6 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் இந்திய அணி!

பல்கலை. தரவரிசையில் முதல் 500 இடங்களில் இந்தியா இல்லை: பிரதமர் மீது குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT