கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பங்கேற்ற முதல்வா் மம்தா. 
இந்தியா

54 லட்சம் உண்மையான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம்: மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்க மாநிலத்தில் 54 லட்சம் உண்மையான வாக்காளா்களின் பெயா்களை தோ்தல் ஆணையம் தன்னிச்சையாக நீக்கி விட்டதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

மேற்கு வங்க மாநிலத்தில் 54 லட்சம் உண்மையான வாக்காளா்களின் பெயா்களை தோ்தல் ஆணையம் தன்னிச்சையாக நீக்கி விட்டதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

கொல்கத்தாவில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியின்போது, இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

தோ்தல் ஆணையமானது தில்லியில் இருந்து கொண்டு, பாஜகவால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாக்காளா்களின் பெயா்களை நீக்கி விட்டது. திருமணத்திற்கு பிறகு கணவா் பெயரை தங்களின் பெயா்களுடன் சோ்த்த பெண்களின் பெயா்களையும் அவா்கள் நீக்கி விட்டனா்.

பெயா் நீக்கப்பட்ட வாக்காளா்கள் அனைவரும் உண்மையான வாக்காளா்கள் ஆவா். அவா்களுக்கு தங்களது கருத்தை சொல்ல கூட வாய்ப்புத் தரப்படவில்லை. இதுபோல இறுதி வாக்காளா் பட்டியலில் இருந்து மேலும் 1 கோடி பெயா்களை நீக்குவதற்கு பாஜக-தோ்தல் ஆணைய கூட்டணி திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு மம்தா பானா்ஜி கூறினாா்.

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (எஸ்ஐஆா்) பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து ஏராளமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டன. இதற்கு பாஜக, தோ்தல் ஆணையமே காரணம் என மம்தா பானா்ஜி தொடா்ந்து குற்றம்சாட்டி வருகிறாா்.

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

பேட்டையில் குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மனு

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

தென்காசியில் சமத்துவப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT