சத்தீஸ்கரில் 29 நக்சல்கள் சரண்!
சத்தீஸ்கரில் 29 நக்சல்கள் சரணடைந்துள்ளது குறித்து...
சத்தீஸ்கர் மாநிலத்தில், 29 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் இன்று (ஜன. 14) சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுக்மா மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புகளைச் சேர்ந்த 29 நக்சல்கள் மூத்த காவல் துறை அதிகாரிகள் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் முன்னிலையில் இன்று சரணடைந்துள்ளனர்.
இந்த நிலையில், சரணடையும் நக்சல்களுக்காக மாநில அரசு வழங்கி வரும் மறுவாழ்வுத் திட்டங்களின் மூலம் ஈர்க்கப்பட்டு இவர்கள் அனைவரும் சரணடைந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்தக் குழுவில், ரூ.2 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த போடியம் புத்ரா என்பவர் சரணடைந்துள்ளார். இவர், கோகுண்டா பகுதியில் நடைபெற்ற மாவோயிஸ்ட் தாக்குதல்களுக்காகத் தேடப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, சத்தீஸ்கரில் 2025 ஆம் ஆண்டில் மட்டும் 1,500 நக்சல்கள் சரணடைந்துள்ளனர். மேலும், வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் நாட்டில் உள்ள நக்சல்கள் முழுவதுமாக அழிக்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
It has been reported that 29 Naxalites surrendered to the security forces in Chhattisgarh state today (Jan. 14).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.