தலைநகர் முழுவதும் புதிதாக 81 சுகாதார மையங்களை தில்லி அரசு தொடங்கியுள்ளது.
தென்மேற்கு தில்லியில் உள்ள நங்கல் ராயாவில் புதிய சுகாதார மையங்களை அந்த மாநில முதல்வர் ரேகா குப்தா திறந்துவைத்தார்.
தில்லியில் ஏற்கெனவே 238 சுகாதார மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் , இந்த சுகாதார மையங்கள் மக்களுக்கு முதன்மை சுகாதார வசதிகளை வழங்கும் என்று அவர் கூறினார்.
இந்த சுகாதார மையங்கள் பெரிய மருத்துவமனைகளின் சுமையைக் குறைத்து, பொதுவான நோய்களுக்கு மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை அவர்கள் இருக்கும் இடத்திலேயே வழங்கும்.
ஒவ்வொரு சுகாதார மையத்திலும் சுமார் 80 வெவ்வேறு பரிசோதனைகள், மகப்பேறு பராமரிப்பு, தடுப்பூசிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள் மற்றும் பல்வேறு பிற வசதிகள் கிடைக்கப்பெறுவர்.
தில்லி நகரம் முழுவதும் 1,100 ஆயுஷ்மான் சுகாதார மையங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.