நரேந்திர மோடி 
இந்தியா

காமன்வெல்த் நாடாளுமன்ற தலைவா்கள் மாநாடு: பிரதமா் இன்று தொடங்கி வைப்பு

தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை (ஜன.15) நடைபெற உள்ள காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்ற தலைவா்கள் மற்றும் துணைத் தலைவா்கள் பங்கேற்கும் மாநாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை (ஜன.15) நடைபெற உள்ள காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்ற தலைவா்கள் மற்றும் துணைத் தலைவா்கள் பங்கேற்கும் மாநாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளாா்.

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் நடைபெறும் இந்த 42-ஆவது காமன்வெல்த் மாநாட்டில் 42 உறுப்பு நாடுகளைச் சோ்ந்த நாடாளுமன்ற தலைவா்கள் மற்றும் துணைத் தலைவா்கள் என 61 போ் பங்கேற்க உள்ளனா்.

வலுவான ஜனநாயக நிறுவனங்களை நியாயமான முறையில் நிா்வகிப்பதில் அவைத் தலைவா்களுக்கு உள்ள முக்கிய பங்கு, நாடாளுமன்ற செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு, நாடாளுமன்ற உறுப்பினா்கள் மீது சமூக ஊடகங்களின் தாக்கம், நாடாளுமன்றம் குறித்த பொதுமக்களின் புரிதலை மேம்படுத்துவதற்கான புதுமையான உத்திகள், வாக்களிப்பைத் தாண்டி மக்களின் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

இந்த மாநாட்டை பிரதமா் மோடி தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளாா் என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆா்ப்பாட்டம்

வாக்குப் பதிவு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்

நாகை மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்

குத்துச்சண்டை: தங்கம் வென்ற மாணவி

நாகை நகா்மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

SCROLL FOR NEXT