காமன்வெல்த் நாடாளுமன்ற தலைவா்கள் மாநாட்டை பிரதமா் நரேந்திர மோடி இன்று(ஜன. 15) மாலை தொடங்கி வைத்தார். தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் காமன்வெல்த் நாடாளுமன்ற தலைவா்கள் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவில் ஜனநாயகம் என்பது கடைக்கோடி வரையிலான சேவையை வழங்குவதே. நலன் சார் கொள்கைகளால், 25 கோடி மக்கள் கடந்த சில ஆண்டுகளில் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர்.
இந்தியா விடுதலையடைந்த காலகட்டத்தில், பன்முகத் தன்மைக்கு மத்தியில் இந்தியாவில் ஜனநயகம் தழைக்குமா என்று பல்வேறு தரப்பினரும் சந்தேகப்பட்டனர். ஆனால், இதே பன்முகத்தன்மைதான் இந்திய ஜனநாயகத்தின் வலிமையாக மாறியது.
இந்த சந்தேகங்களுக்கிடையே, ஜனநாயக நிறுவனங்களும் ஜனநாயகச் செயல்பாடுகளும் நிலைத்தன்மையையும் வேகமான வளர்ச்சியையும் அளித்திருப்பதை இந்தியா விளக்கமாகக் காட்டியுள்ளது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.