ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கியது காங்கிரஸ்!
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மீது காங்கிரஸ் கட்சி, நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கியது பற்றி...
நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன. 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சீன ஆக்கிரமிப்பு விவகாரம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிப். 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. பிப். 4 ஆம் தேதி அன்று இந்த தீர்மானத்திற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உரையாற்றுவார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் மோடி அன்று அவைக்கு வரவில்லை.
Advertisement
Advertisement
'பிரதமர் மோடியை நான்தான் வர வேண்டாம் என்று கூறினேன், அவருக்கு எதிராக எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் சதி செய்யத் திட்டமிட்டிருந்தனர்' என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார். பெண் எம்.பி.க்கள் குறித்து கருத்து தெரிவித்ததால் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சி தரப்பில் கண்டனங்கள் எழுந்தன.
இதையடுத்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை நீக்கக் கோரி அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இன்று(பிப். 10) நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 119 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதிக்கப்படவில்லை, 8 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் மீதான அவதூறு ஆகியவற்றுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு, பிப். 4 அன்று பெண் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்த விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
No-confidence motion notice against Lok Sabha Speaker Om Birla
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.