மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இதனால் பாஜக தலைமை மகிழ்ச்சியில் உள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிர மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் உள்பட பாஜக தலைவர்கள் பலரும் நன்றி தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பதாவது: “மகாராஷ்டிரத்துக்கு நன்றி! தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மக்கள் நலன் சார் கொள்கைகளுக்கு இம்மாநிலத்தின் துடிப்பான மக்கள் ஆசி வழங்கியுள்ளனர்!
மகாராஷ்டிர மக்களுடனான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிணைப்பு மேலும் வலுவாகியிருப்பதையே மகாராஷ்டிரத்தின் பல்வேறு முனிசிபல் கார்ப்பரேசன் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இதற்காக மகாராஷ்டிர மக்களுக்கு நன்றி. முன்னேற்றத்துக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் மக்களின் இந்த வாக்குகள் அமைந்துள்ளன.
மகாராஷ்டிர மக்களிடம் அயராது உழைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒவ்வொரு தொண்டரையும் பார்த்து பெருமை கொள்கிறேன். அவர்கள் மக்களிடம் எங்களின் சாதனைகளைப் பற்றி பரப்புரையில் ஈடுபட்டதுடன் எதிர்க்கட்சிகளின் பொய்களை திறம்பட எதிர்கொண்டு எதிர்காலத்துக்கான நமது திட்டம் குறித்தும் எடுத்துரைத்தனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகள்! என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.