இந்தியாவில் அடுத்த பத்தாண்டுகளில் ஸ்டார்ட்அப் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகளவில் முன்னிலை வகிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 16ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் தற்போது 10 ஆண்டுகளை எட்டிவிட்ட நிலையில், இதனைச் சிறப்பிக்கும் விதமாக தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
ஸ்டார்ட்அப் இந்தியாவின் மாபெரும் நிகழ்வில் பேசிய மோடி கூறியதாவது,
ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் தொடங்கி பத்தாண்டு நிறைவையடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ப் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தங்கள் தொழில்முனைவோர் பயணத்தின் அனுபவங்களையும் பிரதமரிடம் பகிர்ந்துகொண்டனர்.
ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் இந்தியாவின் பொருளாதார, புதுமைக் கண்டுபிடிப்புக் கட்டமைப்பின் முக்கிய அங்கமாக உருவெடுத்துள்ளது. பெரிய புரட்சியாக மாறியுள்ளது. பல்வேறு துறைகளில் நாடு முழுவதும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிகரிக்க இந்த திட்டம் வகை செய்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன.
ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் மற்றும் தொழில்முனைவோர் புதிய யோசனைகளைப் புகுத்தி, சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டும், அதே நேரத்தில் தரமான தயாரிப்புகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்த 10 ஆண்டுகளில், புதிய ஸ்டார்ட்அப் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகை வழிநடத்த வேண்டும் என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும். ஸ்டார்ட்அப்கள் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இன்றைய ஆராய்ச்சி நாளைய அறிவுசார் சொத்தாக மாறுகிறது.
ஸ்டார்ட்அப்களுக்கு ஆரம்பக்கட்ட நிதி வழங்குவதற்காகப் பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் காலாவதியான விதிகளை நீக்கிவிட்டு, புதுமைப் படைப்பாளிகளை நம்பியுள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.