PTI
இந்தியா

கேரள பேரவையிலும் விவாதப்பொருளான ஆளுநர் உரை! - என்ன நடந்தது?

கேரள பேரவையில் ஆளுநர் உரையால் பரபரப்பு...

இணையதளச் செய்திப் பிரிவு

திருவனந்தபுரம் : கேரள சட்டப்பேரவையில் அரிதான நிகழ்வாக ஆளுநர் உரையால் சலசலப்பு ஏற்பட்டது.

தமிழக பேரவையில் இன்று(ஜன. 20) ஆளுநர் உரை விவாதப் பொருளாக மாறியது. அதேபோல, கேரளத்திலும் ஆளுநர் உரையால் சலசலப்பு ஏற்பட்டது. கேரள சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று அம்மாநில ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகார் உரையுடன் தொடங்கியது.

ஆளுநர் தமது உரையை நிறைவு செய்தவுடன் தமது இருக்கையிலிருந்து எழுந்து நின்று பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஊரையில் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்த முழு உரையை வாசிக்கவில்லை. ஆளுநர் உரையில் சில இடங்களில் குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் அவர் வாசிக்காமல் கடந்து சென்றிருக்கிறார்.

மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்த உரையில் குறிப்பிடப்பட்டிருந்த பாஜக தலைமையிலான மத்திய அரசின் நிதி கொள்கைகளை விமர்சித்து வைக்கப்பட்டிருந்தவற்றை அவர் வாசிக்கவில்லை. கேரள பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மாளிகையில் இன்னும் ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ள சட்ட மசோதாக்கள் பற்றியும் உரையில் குறிப்பிடப்பட்டிருந்ததை அவர் வாசிக்கவில்லை என்றார்.

Kerala Assembly witnesses unusual scene as CM ‘corrects’ Governor’s policy address

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“நீங்க பாத்துட்டுதான இருந்தீங்க? மைக்க யாரும் அமத்தல!” பேரவைத் தலைவர் அப்பாவு

காஸா அமைதிக் குழுவில் ஐக்கிய அரபு அமீரகம்..!

நாட் ஷிவர் பிரண்ட் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 155 ரன்கள் இலக்கு!

விரைவில் 1,425 மின்சார வாகனங்களை வழங்கவுள்ள ஏ-1 சுரேஜா!

ஜன நாயகன் ஓடிடியில் வெளியீடு? அமேசான் ப்ரைம் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT