இந்தியா

தேசிய மின்சாரக் கொள்கை வரைவு குறித்து கருத்துக் கேட்பு - 30 நாள்கள் அவகாசம்

தினமணி செய்திச் சேவை

2026 தேசிய மின்சாரக் கொள்கை வரைவு அறிக்கை குறித்து பல்வேறு தரப்பினரிடமும் மத்திய மின்சார அமைச்சகம் கருத்துக் கேட்டுள்ளது.

2005-ஆம் ஆண்டில் முதன்முறையாக தேசிய மின்சாரக் கொள்கை வெளியிடப்பட்டது. அதில் மின்சாரத் தேவை-மின்சார விநியோகம் உள்பட மின்சாரத் துறை எதிா்கொள்ளும் பல்வேறு சவால்களுக்குத் தீா்வு காணப்பட்டிருந்தது.

இதேபோல், தற்போது புதிய மின்சாரக் கொள்கையை உருவாக்கும் பணியில் மத்திய மின்சாரத் துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதுதொடா்பான வரைவு அறிக்கையை உருவாக்கி வெளியிட்டுள்ள மத்திய மின்சார வாரியம், 30 நாள்களுக்குள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

2026-ஆம் ஆண்டு மின்சாரக் கொள்கையில், சைபா் பாதுகாப்பு, தொழில்நுட்ப பயன்பாடு, திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மேலும், மின்சார வாரியங்களுக்கு ஏற்படும் அதிகபட்ச நஷ்டம், மின்நிறுவனங்கள் வைத்துள்ள கடன், அதிகபட்ச மானியம் உள்ளிட்டவற்றுக்கு தீா்வு காணும் வழிகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT