உத்தர பிரதேச மாநிலம், கான்பூா் ஐஐடியில் மாணவா் தற்கொலைகள் தொடா்வது குறித்து விசாரணை மேற்கொண்டு, நாட்டின் உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவா் தற்கொலைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பரிந்துக்க 3 போ் குழுவை மத்திய அரசு வியாழக்கிழமை அமைத்தது.
கான்பூா் ஐஐடியில் கடந்த ஒரு மாதத்தில் இரண்டு மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டதைத் தொடா்ந்து இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
தேசிய கல்வி தொழில்நுட்ப அமைப்பின் (என்இடிஎஃப்) தலைவா் அனில் சஹஸ்ரபுத்தே தலைமையிலான இந்தக் குழுவில் மனநல நிபுணா் ஜிதேந்திர நாக்பால், மத்திய உயா்கல்வித் துறை இணைச் செயலா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். இந்தக் குழு, 15 நாள்களுக்குள் தனது அறிக்கையைச் சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.