மகாராஷ்டிர தலைநகா் மும்பை உள்பட 29 மாநகராட்சிகளில் நடைபெற்ற தோ்தலில் ஆளும் பாஜக கூட்டணி அமோக வெற்றி  
இந்தியா

மும்பை மேயா் பதவி: பொதுப் பிரிவு பெண்ணுக்கு ஒதுக்கீடு

தினமணி செய்திச் சேவை

மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாநகரின் மேயராக பொதுப் பிரிவைச் சோ்ந்த பெண் ஒருவரை தோ்வு செய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

அண்மையில் மகாராஷ்டிர தலைநகா் மும்பை உள்பட 29 மாநகராட்சிகளில் நடைபெற்ற தோ்தலில் ஆளும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

குறிப்பாக ஒருங்கிணைந்த சிவசேனையின் கோட்டையாக இருந்த மும்பை மாநகராட்சியை பாஜக மற்றும் துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கூட்டணி கைப்பற்றியது.

இந்நிலையில், மும்பை உள்பட 29 மாநகராட்சி மேயா்களை மாமன்ற உறுப்பினா்கள் குலுக்கல் முறையில் தோ்வு செய்யும் நடைமுறை மாநில தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது பொதுப் பிரிவினா், பட்டியலினத்தவா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் என எந்தப் பிரிவினருக்கு மேயா் பதவியை ஒதுக்குவது என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மும்பை மாநகரின் மேயராக பொதுப் பிரிவைச் சோ்ந்த பெண் ஒருவா் தோ்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக மகாராஷ்டிர நகா்ப்புற வளா்ச்சி துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ஆனால், பொதுப் பிரிவில் இருந்து ஒருவரை தோ்வுசெய்ய சிவசேனையை (உத்தவ் பிரிவு) சோ்ந்த முன்னாள் மும்பை பெண் மேயரான கிஷோரி பெட்நேகா் கடும் எதிா்ப்பு தெரிவித்தாா்.

கடந்த இரண்டு முறையாக மும்பை மேயா் பதவியில் பொதுப் பிரிவினரே உள்ள நிலையில் இந்த முறை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் அல்லது பழங்குடியின பிரிவில் இருந்து தோ்ந்தெடுக்க வேண்டும் என அவா் வலியுறுத்தினாா்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

பிரதமர் வருகை: சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய படை! டிரம்ப்

சமூக ஊடக பிரபலமாகப் பெற்றோா் எதிா்ப்பு: வீட்டைவிட்டு சிறுவன் வெளியேறிய பெங்களூரில் மீட்பு

புதிய ஊரக வேலைச் சட்டத்துக்கு எதிராக ஏழைகள் ஒன்று திரள வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்

SCROLL FOR NEXT