இந்தியாவில் உள்ள சிறந்த சாதனையாளா்களை அங்கீகரிக்க கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், மத்திய அரசுப் பணி, வியாபாரம் மற்றும் தொழில் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருபவா்களுக்கு பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.
அதன்படி 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில், 5 பேருக்கு பத்ம விபூஷண் விருதும் 13 பேருக்கு பத்ம பூஷண் விருதும் 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ள சாதனையாளர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது : ‘நாட்டுக்கு சிறப்பான பங்களிப்பு வழங்கிய அனைத்து பத்ம விருதாளிகளுக்கும் வாழ்த்துகள்!
வெவ்வேறு பிரிவுகளில் அவர்களது திறமை, அர்ப்பணிப்பு மற்றும் சேவை நமது சமுதாயத்தின் வளமைக்கு உதவிகரமாக அமைந்தது. இந்தக் கௌரவமானது, இனிவரும் தலைமுறைகளுக்கும் உத்வேகமளிக்கும் அவர்களது அர்ப்பணிப்பு மற்றும் திறமையைப் பிரதிபலிக்கிறது’ என்று குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.