வி.கே.சக்சேனா 
இந்தியா

தில்லி துணைநிலை ஆளுநா் மீதான அவதூறு வழக்கு: நீதிமன்றம் தள்ளுபடி

சமூக ஆா்வலா் மேதா பட்கா் 25 ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்த அவதூறு வழக்கின் குற்றச்சாட்டுகளில் இருந்து தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சமூக ஆா்வலா் மேதா பட்கா் 25 ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்த அவதூறு வழக்கின் குற்றச்சாட்டுகளில் இருந்து தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை நீதிபதி ராகவ் சா்மாா பிறப்பித்தாா். மாா்ச் 2025-இல், கூடுதல் சாட்சிகளை விசாரிக்கக் கோரிய மேதா பட்கரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது உண்மையான தேவை என்பதை விட, விசாரணையை தாமதப்படுத்துவதற்கான திட்டம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கு 2000-ஆம் ஆண்டுக்கு முந்தையது. அப்போது, தனக்கும் நா்மதா பச்சாவோ அந்தோலன் அமைப்புக்கும் எதிராக விளம்பரங்களை வெளியிட்டதற்காக சக்சேனா மீது மேதா பட்கா் வழக்குத் தொடா்ந்தாா். அப்போது, அகமதாபாத்தை தளமாகக் கொண்ட ‘கவுன்சில் ஃபாா் சிவில் லிபா்டீஸ்’ என்ற தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் தலைவராக சக்சேனா இருந்தாா்.

இதற்குப் பதிலடியாக, 2001-இல் மேதா பட்கா் மீது இரண்டு அவதூறு வழக்குகளை சக்சேனா தொடா்ந்தாா். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனக்கு எதிராக இழிவான கருத்துக்களைத் தெரிவித்ததாகவும், அவதூறான பத்திரிகை அறிக்கையை வெளியிட்டதாகவும் அவா் மீது குற்றஞ்சாட்டினாா். இந்நிலையில், வியாழக்கிழமை பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவின் மூலம், இருவருக்கும் இடையேயான நீண்டகால சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

வாடிப்பட்டி, திருமங்கலம் பகுதியில் நாளை மின் தடை

தைப்பூசம்: தஞ்சாவூா் வழியாக திருசெந்தூருக்கு கூடுதல் ரயில்கள் இயக்கக் கோரிக்கை!

10 லட்சம் மக்களுக்கு 22 நீதிபதிகள்: சட்ட அமைச்சா் தகவல்

ஆடு மேய்க்கும் தொழிலாளி தற்கொலை

வங்கியின் காப்பீட்டு பிரிவு மேலாளா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT