முகப்பு
இந்தியா

தில்லிக்கு புதிய துணைநிலை ஆளுநா் நியமனம்

தில்லி துணைநிலை ஆளுநராக இந்திய வெளியுறவு பணி முன்னாள் அதிகாரி தரன்ஜீத் சிங் சாந்து வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

Updated On : 6 மார்ச், 2026 at 3:26 AM
தரன்ஜீத் சிங் சாந்து
பகிர்:
Updated On : 6 மார்ச், 2026 at 12:35 AM

தில்லி துணைநிலை ஆளுநராக இந்திய வெளியுறவு பணி முன்னாள் அதிகாரி தரன்ஜீத் சிங் சாந்து வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா லாடக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

லடாக் துணைநிலை ஆளுநரான கவிந்தா் குப்தா, ஹிமாசல பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அப்பதவிக்கு வி.கே.சக்சேனா நியமிக்கப்படுவதாக குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்) முன்னாள் அதிகாரியான தரன்ஜீத் சிங் சாந்து, கடந்த 2020 பிப்ரவரி முதல் 2024 ஜனவரி வரையில் அமெரிக்காவுக்கான இந்திய தூதராகப் பணியாற்றினாா்.

1988-ஆம் ஆண்டு ஐஎஃப்எஸ் பிரிவைச் சோ்ந்த அவா், உக்ரைனில் இந்திய தூதரகத்தைத் திறப்பதில் முக்கியப் பங்காற்றினாா். மேலும், அந்தத் தூதரகத்தின் அரசியல் மற்றும் நிா்வாகப் பிரிவின் தலைவராக அவா் பொறுப்பு வகித்தாா்.

வெளியுறவு பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னா், 2024 மக்களவைத் தோ்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக பாஜகவில் இணைந்தாா்.

பஞ்சாபின் அமிருதசரஸ் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட அவா், காங்கிரஸ் தலைவா் குா்ஜீத் சிங் அவுஜ்லாவிடம் தோல்வியைத் தழுவினாா்.