காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் ராகுல் காந்தியையும் காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான சசி தரூர் வியாழக்கிழமை(ஜன. 29) சந்தித்துப் பேசினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் கார்கேவின் அறையில் சுமார் 1.45 மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இந்த ஆலோசனைக்குப்பின் வெளியேறிய சசி தரூர், செய்தியாளர்களுடன் பேசுகையில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவருடனான எங்களது ஆலோசனை ஆக்கப்பூர்வமானதாகவும் நேர்மறையானதாகவும் நன்மை பயக்கும் விஷயமாகவும் அமைந்தது.
யாவும் நலமே! நாங்கள் ஒருங்கே சேர்ந்து ஒரே பாதையில் சென்று கொண்டிருக்கிகிறோம்” என்றார்.
கேரள பேரவைத் தேர்தல் இந்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதா? என்ற கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அவர், “எந்தவொரு பதவிக்கும் வேட்பாளராக நிற்பதில் எனக்கு விருப்பமில்லை. இப்போது, நானொரு எம்.பி., அந்த வகையில், நான் திருவனந்தபுரம் வாக்காளர்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறேன். நாடாளுமன்றத்தில் அவர்களின் கோரிக்கைகளை எடுத்துச் செல்வதே எமது கடமை” என்றார்.
காங்கிரஸ் தலைமையுடனான இந்தச் சந்திப்பு, மிகுந்த திருப்திகரமாக நிறைவடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.