மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒரு நேர்மையான தலைவர் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் புகழாரம் சூட்டியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுடன் சசி தரூர் பேசுகையில், "ராகுலுக்கு எதிரான எந்தவொரு தவறான கருத்தையும் நான் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. அவர் ஒரு நேர்மையான தலைவர்.
நாட்டில் வகுப்புவாதம், வெறுப்பு, பிளவுபடுத்தும் அரசியலுக்கு எதிராக ராகுல் தொடர்ந்து பேசுவதால்தான், அனைவரும் அவரை விரும்புகின்றனர்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, வியாழக்கிழமையில் (ஜன. 29) காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியையும் சசி தரூர் சந்தித்துப் பேசினார்.
மேலும், அனைத்தும் நன்றாகவே உள்ளது. ஒருமித்த கருத்துடன் செயல்படுகிறோம் என்று சசி தரூர் கூறினாா்.
அண்மையில் சசி தரூா் பங்கேற்ற காங்கிரஸ் நிகழ்வில் ராகுல் காந்தி அவரைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்ததாகவும், இதனால் அதிருப்தியடைந்த சசி தரூா், கட்சியின் முக்கியமான தோ்தல் ஆலோசனைக் கூட்டத்தைத் தவிா்த்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.
அதுமட்டுமின்றி, பாஜக மீதான ராகுல் காந்தியின் ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டை நிராகரித்தது, பாஜக மூத்த தலைவா் அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தது உள்ளிட்ட பிரச்னைகளால், காங்கிரஸ் கட்சியில் இருந்து சசி தரூர் விலகிச் செல்வதுபோன்ற தோற்றம் ஏற்பட்டது. கேரள காங்கிரஸ் தலைவா்களும் தரூரை கடுமையாக விமா்சித்து வந்தனா்.
இந்த நிலையில்தான், கார்கேவையும் ராகுலையும் சசி தரூர் சந்தித்துப் பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.