திருப்பதி மலைப்பாதையில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்த 116 வயது மூதாட்டி!
116 வயதான மூதாட்டி திருப்பதி மலைப் பாதையில் நடந்தே சென்று சாமி தரிசனம் செய்துள்ளது குறித்து...
கர்நாடகத்தைச் சேர்ந்த 116 வயதான மூதாட்டி திருமலையில் நடந்தே சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
தள்ளாத வயதிலும் மலை ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்த மூதாட்டியின் பக்தி, கோயில் நிர்வாகிகள் மட்டுமின்றி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்த நவநீதம்மா என்ற 116 வயது மூதாட்டி, திருப்பதிக்குச் சென்று திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
திருமலையில் பக்தர்கள் பலரும் நடந்து சென்று தரிசனம் செய்யும் படிப்பாதை வழியாக, இந்த மூதாட்டியும் நடந்து சென்று சாமி தரிசனம் செய்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சக பக்தர்கள் உதவியுடன் திருமலை படியேறிய நவநீதம்மாவின் பக்தியை பாராட்டும் விதமாக இன்று காலை விஐபி பிரேக் தரிசனத்தில் அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.
இறைவன் மீது கொண்ட பக்தியின் காரணமாக வயது முதிர்வின்போதும் துணிந்து நடந்தே வந்து சாமி தரிசனம் செய்துள்ள நிகழ்வு, சக பக்தர்கள், கோயில் நிர்வாகிகள் மட்டுமின்றி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் கவர்ந்துள்ளது.
மூதாட்டியின் பக்தியை பாராட்டும் விதமாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் சந்திரபாபு நாயுடு பதிவிட்டுள்ளதாவது:
''வயது வெறும் எண்தான் என்பதை மூதாட்டியின் பக்தி காட்டுகிறது. வெங்கடேச பெருமாளின் தரிசனத்திற்காக பக்தர்கள் நடந்துவரும் மலைப்பாதையில் நடந்து வந்து சாமி தரிசனம் செய்துள்ளார் கர்நாடகத்தைச் சேர்ந்த 116 வயதான மூதாட்டி. அவரின் வாழ்நாள் ஆசைக்காக துணை நின்ற அவரின் குடும்பத்தைப் பாராட்டுகிறேன். உண்மையாகவே ஊக்கமளிக்கும் நிகழ்வு'' இது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இத்துடன் குடும்பத்தாரின் உதவியுடன் மூதாட்டி, மலை ஏறி வரும் விடியோவையும் சந்திரபாபு நாயுடு பகிர்ந்துள்ளார்.
116 year old Karnataka woman treks by steps to Tirumala on foot AP CM Naidu Hails
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.