முகப்பு
இந்தியா

கேரள அரசின் அடுத்த தலைமைச் செயலராக விஸ்வநாத் சின்ஹா நியமனம்!

கேரள அரசின் அடுத்த தலைமைச் செயலர் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 24 ஜூன் 2026, 4:22 pm IST
ஐஏஎஸ் அதிகாரி விஸ்வநாத் சின்ஹா - படம் - கேரள அரசு
பகிர்:

கேரள மாநில அரசின் அடுத்த தலைமைச் செயலராக ஐஏஎஸ் அதிகாரி விஸ்வநாத் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரள அரசின் தலைமைச் செயலராகக் கடந்த 2025 மே மாதம் முதல் ஐஏஎஸ் அதிகாரி ஏ. ஜெயதிலக் பதவி வகித்து வருகிறார். 1991 ஆம் ஆண்டின் ஐஏஎஸ் பிரிவு அதிகாரியான இவரது பதவிக்காலம் வரும் ஜூன் 30 ஆம் தேதி அன்று நிறைவடைகிறது.

இந்த நிலையில், கேரள அரசின் அடுத்த தலைமைச் செயலராக பிகாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி விஸ்வநாத் சின்ஹாவை முதல்வர் வி.டி. சதீசன் தலைமையிலான அமைச்சரவை இன்று (ஜூன் 24) நியமித்துள்ளது.

Advertisement

Advertisement

ஏற்கெனவே, கேரள உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் தலைமைச் செயலராகப் பதவி வகித்து வரும் 1992 ஐஏஎஸ் பிரிவு அதிகாரி விஸ்வநாத் சின்ஹா வரும் 2028 செப்டம்பரில் ஓய்வு பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கேரள அரசின் தலைமைச் செயலர் பதவிக்குப் பணிமூப்பின் அடிப்படையில் தற்போது அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

IAS officer Vishwanath Sinha has been appointed as the next Chief Secretary of the Kerala government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments