மேற்காசிய நிலவரத்தைக் கண்காணிக்க அமைச்சகங்களுக்கு இடையிலான குழு
மேற்காசிய நிலவரத்தை மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
இந்தியாமேற்காசிய நிலவரத்தைக் கண்காணிக்க அமைச்சகங்களுக்கு இடையிலான குழு
மேற்காசிய நிலவரத்தை மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
மேற்காசிய நிலவரத்தை மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
இக்குழு அப்பிராந்தியத்தில் இருந்து நடைபெறும் கப்பல் போக்குவரத்து, ஏற்றுமதி, முக்கியப் பொருள்களின் இறக்குமதி ஆகியவற்றை தினசரி அடிப்படையில் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள், பதிலடியாக அமெரிக்க ஆதரவு வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்தும் தாக்குதலால் கடல்வழி, வான்வழிப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்போா் தொடா்ந்து நீடித்தால் வளைகுடாவில் இருந்து இந்தியாவுக்கும் வரும் கச்சா எண்ணெய் பெரிய அளவில் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.
இதையடுத்து நிலைமையைக் கண்காணிக்கவும், மாற்று வழிகளைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவும் அமைச்சகங்களுக்கு இடையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம் உடனடியாக நடைபெற்றது. அப்போது, அமைச்சகங்கள் தரப்பில் பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
இது தொடா்பாக அமைச்சா் பியூஷ் கோயல் கூறுகையில், ‘மேற்காசியாவில் எழுந்துள்ள மோசமான சூழலின் தாக்கத்தை முடிந்த அளவுக்கு குறைக்க உறுதியேற்றுள்ளோம். இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் இதில் தொடா்புடைய அனைத்துத் தரப்புடனும் பேச்சு நடைபெற்று வருகிறது. ஏற்றுமதியாளா்களின் நலன்களைக் காக்கும் வகையில் சுங்கத் துறை, துறைமுக ஆணையங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் சுமுகமாக செயல்படும். இந்தியாவுக்கு வரும் பொருள் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க முனைப்புடன் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.