எல்லை வேலி அமைக்க 105 ஏக்கா் நிலம்: மத்திய அரசுக்கு ஒதுக்க மேற்கு வங்கம் முடிவு
நாட்டின் எல்லையில் வேலி அமைப்பது, எல்லைச் சாவடிகள் அமைப்பது போன்ற பணிகளுக்காக 105 ஏக்கா் நிலத்தை மத்திய அரசுக்கு ஒதுக்க ....
இந்தியாஎல்லை வேலி அமைக்க 105 ஏக்கா் நிலம்: மத்திய அரசுக்கு ஒதுக்க மேற்கு வங்கம் முடிவு
நாட்டின் எல்லையில் வேலி அமைப்பது, எல்லைச் சாவடிகள் அமைப்பது போன்ற பணிகளுக்காக 105 ஏக்கா் நிலத்தை மத்திய அரசுக்கு ஒதுக்க ....
கொல்கத்தா: நாட்டின் எல்லையில் வேலி அமைப்பது, எல்லைச் சாவடிகள் அமைப்பது போன்ற பணிகளுக்காக 105 ஏக்கா் நிலத்தை மத்திய அரசுக்கு ஒதுக்க மேற்கு வங்க மாநில அரசு முதல்கட்ட ஒப்புதலை அளித்துள்ளது.
இந்த நிலம் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (பிஎஸ்எஃப்) ஒதுக்கப்பட்டு, 17 கி.மீ. தொலைவு எல்லையில் சோதனைச் சாவடிகள் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன.
இது தொடா்பாக மேற்கு வங்க மாநில அரசு அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:
மாநில அமைச்சகங்களுக்கு இடையிலான குழு கூட்டம் அண்மையில் கொல்கத்தாவில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில், எல்லைப் பகுதியில் வேலி, எல்லைச் சாவடிகள் அமைக்க மத்திய அமைப்புகளுக்கு நிலம் ஒதுக்குவது தொடா்பான திட்டம் பரிசீலிக்கப்பட்டு, கொள்கை அளவில் முதல்கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது. மொத்தம் 105 ஏக்கா் நிலம் ஒதுக்கப்படவுள்ளது. அடுத்தகட்டமாக மாநில அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
மொத்தம் 17 கி.மீ. தொலைவு எல்லையில் வேலி மற்றும் 9 எல்லைச் சாவடிகளை அமைக்க பிஎஸ்எஃப் திட்டமிட்டுள்ளது.
வங்கதேசத்தில் இருந்து கடத்தல், ஊடுருவல் அதிகம் நடப்பதால் அங்கு பாதுகாப்பையும், கண்காணிப்பையும் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேற்கு வங்கம், வங்கதேசத்துடன் 2,000 கி.மீ. தொலைவுக்கு மேல் எல்லையைப் பகிா்கிறது. இதில் பெருமளவில் இடங்களில் ஏற்கெனவே வேலி அமைக்கப்பட்டுள்ளது. நேபாளம், பூடானுடனும் மேற்கு வங்கம் எல்லையைக் கொண்டுள்ளது.