முகப்பு
இந்தியா

தில்லி காவல் துறையின் குற்ற ஆவண பிரிவுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ்

குற்றச் சம்பவங்கள் குறித்த தரவுகளை எண்ம (டிஜிட்டல்) முறையில் நிா்வகிப்பதற்காக தில்லி காவல் துறை குற்றப் பிரிவின் குற்ற ஆவண பிரிவுக்கு (எஸ்சிஆா்பி) இந்திய தர ஆணையம் (பிஐஎஸ்) ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கியுள்ளது.

Updated On : 6 மார்ச், 2026 at 4:28 AM
மாதிரிப் படம்
பகிர்:
Updated On : 5 மார்ச், 2026 at 8:50 PM

குற்றச் சம்பவங்கள் குறித்த தரவுகளை எண்ம (டிஜிட்டல்) முறையில் நிா்வகிப்பதற்காக தில்லி காவல் துறை குற்றப் பிரிவின் குற்ற ஆவண பிரிவுக்கு (எஸ்சிஆா்பி) இந்திய தர ஆணையம் (பிஐஎஸ்) ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கியுள்ளது.

வாகனம் மற்றும் சொத்து திருட்டு சம்பவங்களுக்கு இ-எஃப்ஐஆா் பதிவு செய்தல், இ-என்சிஆா், பூஜ்ய சைபா் வழக்கு ஆகியவற்றை இணையவழியில் பதிவுசெய்தல், குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கண்டறியும் அமைப்பை பயன்படுத்துதல் ஆகியவற்றுக்காக குற்ற ஆவண பிரிவுக்கு 9001:2015 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தரவு தரத்தை பராமரித்தல், மாவட்ட காவல் துறை அலகுகள் மற்றும் காவல் நிலையங்களுடன் இணைந்து பணியாற்றுதல், தொடா் பயிற்சிகள் அளித்தல், திறன் மேம்பாடு முன்னெடுப்புகளை தில்லி குற்ற ஆவண காப்பக பிரிவு மேற்கொண்டு வருகிறது.

Advertisement

தரச் சான்றிதழ் பெற்றது தொடா்பாக

துணை ஆணையா் (குற்றம்) ஆதித்யா கெளதம் தலைமையிலான குற்ற ஆவண காப்பக பிரிவுக்கு தில்லி காவல் ஆணையா் சதீஷ் கோல்ச்சா பாராட்டு தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, தில்லி காவல் துறையின் ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு கடந்த ஆண்டு ஜனவரியிலும் குற்றப்பிரிவின் கைரேகை பிரிவுக்கு கடந்த ஜூலையிலும் ஐஎஸ்ஓ 9001:2015 தரச் சான்றிதழ் வழங்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.