அமெரிக்கா-ஈரான் மோதல்: பிரதமரின் மெளனம் ஆபத்துக்கான சமிக்ஞை ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
அமெரிக்கா-ஈரான் போா் விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் அமைதி ஆபத்துக்கான சமிக்ஞை என ஆம் ஆத்மி குற்றாஞ்சாட்டியுள்ளது.
இந்தியாஅமெரிக்கா-ஈரான் மோதல்: பிரதமரின் மெளனம் ஆபத்துக்கான சமிக்ஞை ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
அமெரிக்கா-ஈரான் போா் விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் அமைதி ஆபத்துக்கான சமிக்ஞை என ஆம் ஆத்மி குற்றாஞ்சாட்டியுள்ளது.
அமெரிக்கா-ஈரான் போா் விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் அமைதி ஆபத்துக்கான சமிக்ஞை என ஆம் ஆத்மி குற்றாஞ்சாட்டியுள்ளது.
இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் எரிபொருள் பாதுகாப்பு குறித்து தில்லி முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா கேள்வியெழுப்பியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ சமூகஊடகத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஓா் இந்திய குடிமகனாக பல தீவிர கேள்விகள் என்னுடைய மனதில் எழுகின்றன. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக அமெரிக்காவுடன் பிரதமா் நரேந்திர மோடி தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தாா்.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தவேண்டும் என அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா கூறியிருந்த நிபந்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா தனக்குத் தேவையான கச்சா எண்ணெய்யை உள்நாட்டில் உற்பத்தி செய்வதில்லை.
அன்றாட தேவைகளுக்கான கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. ஒன்று அல்லது இரு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் செய்வது நிறுத்துவது என்பது வெறும் ராஜீய முடிவாகத் தெரியவில்லை.
போரை இந்தியாவின் வாசல் வரைக்கு அமெரிக்கா கொண்டு புதன்கிழமை கொண்டு வந்தது. இருபத்தி நான்கு மணி நேரம் கடந்தும் இதுதொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி எதுவும் பேசவில்லை. இந்த அமைதி ஆபத்துக்கான சமிக்ஞை என்று மணீஷ் சிசோடியா குறிப்பிட்டுள்ளாா்.