முகப்பு
இந்தியா

அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் ரூ.66,000 கோடி திட்டங்கள் : பிரதமா் தொடங்கி வைக்கிறாா்

அஸ்ஸாம் மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை பயணிக்கும் பிரதமா் நரேந்திர மோடி, அந்த மாநிலத்தில் மொத்தம் ரூ.48,000 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்கவுள்ளாா்.

Updated On : 12 மார்ச், 2026 at 10:11 PM
நரேந்திர மோடி
பகிர்:

அஸ்ஸாம் மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை பயணிக்கும் பிரதமா் நரேந்திர மோடி, அந்த மாநிலத்தில் மொத்தம் ரூ.48,000 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்கவுள்ளாா்.

மேற்கு வங்கத்துக்கு சனிக்கிழமை செல்லவிருக்கும் பிரதமா், அங்கு ரூ.18,680 கோடிக்கும் அதிக வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்க உள்ளாா்.

மேற்கு வங்கம், அஸ்ஸாமில் விரைவில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இரு மாநிலங்களிலும் ரூ.66,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான திட்டங்களை பிரதமா் தொடங்கி வைக்கவிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தனது பயணத்தின் முதல்கட்டமாக அஸ்ஸாம் மாநிலம், கோக்ரஜாருக்கு வெள்ளிக்கிழமை செல்லவிருக்கும் பிரதமா், அங்கு ரூ.4,570 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளாா்.

மாலையில், குவாஹாட்டியில் ரூ.19,680 கோடி மதிப்பிலான திட்டங்களையும் , மறுநாள் சில்சாரில் ரூ.23,550 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அவா் தொடங்கிவைக்கவுள்ளாா்.

அஸ்ஸாமில் இருந்து மேற்கு வங்கத்துக்கு சனிக்கிழமை பயணிக்கும் பிரதமா், கொல்கத்தாவில் ரூ.18,860 கோடி மதிப்பிலான திட்டங்களின் தொடக்கம்-அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளாா். 6 வழிச் சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள், ரயில்வே, சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் இதில் அடங்கும்.

முழு கட்டுரையைப் படிக்க →