தேர்தல் அரசியலில் ஆர்வமில்லை! இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன்!
தேர்தல் அரசியலில் ஆர்வமில்லை என பிரபல கால்பந்து வீரர் தெரிவித்தது குறித்து...
தேர்தல் அரசியலில் ஆர்வமில்லை என பிரபல கால்பந்து வீரர் மற்றும் இந்திய கால்பந்து அணியின் முன்னள் கேப்டன் இனிவலப்பில் மணி விஜயன் இன்று தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஜயன் “சுரேஷ் கோபி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் எத்தனையோ முறை என்னை அரசியலுக்கு அழைத்துள்ளனர். பல ஆண்டுகளாக என் மனைவியும் என்னை அரசியலில் ஈடுபடுத்த முயற்சிக்கின்றார். அண்மையில் பிரதமர் மோடி கேரளம் வந்தபோது அவரைச் சந்தித்தேன். அப்போதும் அரசியல் அழைப்பு வந்தது.
இருப்பினும் தேர்தல் அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லை. ஆனால், எந்தக்கட்சி மாநிலங்களவையில் இடம் கொடுத்தாலும் அதனை ஏற்றுக்கொள்வேன்” எனத் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
கேரள மக்களிடையே விஜயன் பெரும் பிரபலமாக உள்ள நிலையில் அவர் கட்சியில் இடம் பெற்றால் அது அந்தக் கட்சிக்கு பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அர்ஜுனா, பத்மஸ்ரீ போன்ற உயரிய விருதுகளைப் பெற்ற விஜயன் கால்பந்தில் மட்டுமல்லாமல் திமிரு, கொம்பன், கெத்து, பிகில் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Famous footballer and former captain of the Indian football team, Mani Vijayan, said today that he is not interested in electoral politics.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.