அணியின் நலனுக்கு முன்னுரிமையளித்த வீரர்கள்; முன்னாள் இந்திய கேப்டன் பாராட்டு!
அணியின் நலனுக்கு முன்னுரிமையளித்து விளையாடியதற்காக இந்திய அணியை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.
அணியின் நலனுக்கு முன்னுரிமையளித்து விளையாடியதற்காக இந்திய அணியை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் நேற்று (ஜூன் 13) நடைபெற்றது. ஆட்டம் மழை காரணமாக 25 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ஷுப்மன் கில் 66 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து, கே.எல்.ராகுல் 39 ரன்களும், இஷான் கிஷன் 34 ரன்களும் எடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில்லுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அணியின் நலனுக்கு முன்னுரிமையளித்து சவாலான இலக்கை துரத்திப் பிடித்த இந்திய அணியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆப்கானிஸ்தான் வீரர் ஸியா உர் ரஹ்மான் ஓவரில் கே.எல்.ராகுல் 20 ரன்கள் எடுத்தார். அதற்கு முன்பாக அவர் வீசிய மூன்று ஓவர்களில் வெறும் 19 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். அந்த நேரத்தில் அணியின் வெற்றிக்கு 30 ரன்களும், ஷுப்மன் கில் சதம் விளாச 21 ரன்களும் தேவைப்பட்டன. ஆனால், கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அதிலிருந்து அணியின் நலனுக்கு வீரர்கள் முன்னுரிமை அளிப்பது தெளிவாகத் தெரிந்தது.
தனிநபர் சாதனைகளை அவர்கள் பார்க்கவில்லை. கடினமான இலக்கை 23-வது ஓவரில் சேஸ் செய்தது மிகவும் அற்புதமாக இருந்தது. இந்த இலக்கை எட்டிப் பிடித்தது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. ஆனால், நமது கண்களுக்கு அதனை இந்திய அணி எளிதாகக் காட்டியுள்ளது என்றார்.
நேற்றையப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
The former Indian team captain has stated that prioritizing the team over individual achievements is crucial.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.