FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

38 வயதிலும் ஆதிக்கம்: ஆட்ட நாயகன், தொடர் நாயகன், மதிப்பு மிக்க வீரர் விருதுகளை வென்ற சுனில் நரைன்!

எம்எல்சி தொடரின் பல விருதுகளை அள்ளிக் குவித்த 38 வயதான வீரர் சுனில் நரைன் குறித்து...

Updated On : 19 ஜூலை 2026, 10:05 pm IST
சுனில் நரைன். - படம்: எக்ஸ் / எம்எல்சி.
பகிர்:

அமெரிக்காவில் நடைபெற்ற எம்எல்சி டி20 லீக் தொடரின் மதிப்பு மிக்க வீரர் விருதை லாஸ் ஏஞ்சலீஸ் நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் சுனில் நரைன் (38 வயது) வென்றுள்ளார்.

நடப்பு சீசனின் இறுதிப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான வாஷிங்டன் ஃபிரீடம் அணியை 1 ரன் வித்தியாசத்தில் ஹோல்டர் தலைமையிலான லாஸ் ஏஞ்சலீஸ் நைட் ரைடர்ஸ் அணி வென்றுள்ளது.

இந்தத் தொடர் ஜூன் 18 முதல் தொடங்கி இன்று (ஜுலை 19) வரை நடைபெற்றது. இதில் லாஸ் ஏஞ்சலீஸ் நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் சுனில் நரைன் 18 விக்கெட்டுகள் எடுத்தார்.

Advertisement

Advertisement

சுனில் நரைனுடன் சேர்ந்து பார்ட்மென், ரஸ்ஸல் 18 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்கள். இருப்பினும் நரைன் குறைவான ரன்களை வழங்கி முதலிடம் பிடித்தார். இறுதிப் போட்டியிலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

சுனில் நரைன் இந்தத் தொடரில் எகானமி 4.74ஆக பந்துவீசியது குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் சுனில் நரைன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தச் சிறப்பான செயல்பாடுகளால் சுனில் நரைனுக்கு மதிப்பு மிக்க வீரர் விருதும் வழங்கப்பட்டது. 38 வயதிலும் தனது பந்துவீச்சில் அதிகாரத்தை செலுத்தி வருகிறார்.

summary

Dominant at 38: Sunil Narine wins Man of the Match, Man of the Series and Most Valuable Player awards in 2026 Cognizant Major League Cricket

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments