வெற்றிக்கான காரணம் பகிர்ந்த ஆட்ட நாயகன் அன்ஷுல் கம்போஜ்!
முதல் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய வீரர் அன்ஷுல் கம்போஜ் பேட்டி குறித்து...
நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய வீரர் அன்ஷுல் கம்போஜ், “நான் எந்த இடத்தில் பந்துவீச வேண்டும் என்பதில் மட்டுமே கவனமாக இருந்தேன்” எனப் பேட்டி அளித்துள்ளார்.
ஆக்லாந்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச, பேட்டிங் செய்த நியூசிலாந்து 40.2 ஓவர்களில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 4, அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி டிஎல்எஸ் விதியினால் 22.4 ஓவர்களில் 143/5 ரன்கள் எடுத்து வென்றது.
Advertisement
Advertisement
10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் எடுத்து 22 ரன்கள் மட்டுமே கொடுத்த அன்ஷுல் கம்போஜ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இது குறித்து அவர் பேசியிருப்பதாவது:
எனது சிறப்பான பந்துவீச்சுக்குக் காரணம் நான் தொடர்ச்சியாக ஒரே வரிசை, இடத்தில் பந்துவீசினேன். ஆடுகள் எப்படி இருக்கிறதென பெரிதாக சிந்திக்காமல் அடிப்படையான விஷயத்தைச் செய்தேன்.
ஹோபல் சீம் ஆகும்படியான பந்துகளுக்கு நல்ல மரியாதை இருந்தது. அதனால் அதனை அதிகமாக பயன்படுத்தினேன். சரியான இடம், வரிசையில் பந்துவீசுவதில் மட்டுமே கவனம் செலுத்தினேன்.
பேட்டர்களின் பலம் எது? பலவீனம் எது என்று பார்த்து அதற்கேற்ற இடத்தில் பந்துவீசினேன். ஆடுகளத்தில் நல்ல பௌன்ஸ் இருந்தது. அதனால் அது எனக்கு உதவியாக இருந்தது. சரியான லைன், லெந்தில் பந்துவீசிவதில் மட்டுமே கவனம் செலுத்தினேன் என்றார்.