FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆட்ட நாயகன் விருதை உயிரிழந்த கால்பந்து வீரருக்கு சமர்ப்பித்த ரபீனியா!

சாம்பியன்ஸ் லீக்கில் ஆட்ட நாயகன் விருது வென்ற பார்சிலோனா அணியின் கேப்டன் ரபீனியா கூறியிருப்பதாவது...

ஜீசஸ் டி மிகைல், ரபீனியா - படங்கள்: ஏபி, சாம்பியன்ஸ் லீக்
பகிர்:

ஐரோப்பிய கணத்தில் நடைபெறும் மிகப்பெரிய கால்பந்துத் தொடரான சாம்பியன்ஸ் லீக்கில் ஆட்ட நாயகன் விருது வென்ற ரபீனியா, “இந்த விருதை மறைந்த கால்பந்து வீரருக்கு சமர்ப்பிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்டன் வில்லாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி, அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் கேப்டன் ரபீனியா இரண்டாம் பாதியில் 52, 64ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார். இவர் 70ஆவது நிமிஷத்தில் சப்ஸ்ட்யூட் மூலம் மாற்றப்பட்டார்.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் ரபீனியா ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார். இந்த விருதை வென்ற பிறகு அவர் பேசியிருப்பதாவது:

நான் கால்பந்து பற்றி பேச விரும்பவில்லை. கால்பந்து வீரர் ஜூசஸ் குடும்பத்துக்கு எனது ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று கால்பந்து பற்றி பேசுவதற்கு ஏற்ற நாள் இல்லை.

இந்தத் துயரம் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். இது மிகவும் இரக்கமற்றது. இந்தச் செய்தியை அறிந்ததும் நாங்கள் மிகவும் வருத்தம் அடைந்தோம்.

இந்தச் சூழ்நிலையில் சென்று விளையாடுவது கடினமானது. இது நாளை உங்களுக்கோ அல்லது நெருங்கியவர்களுக்கோ நடக்க வாய்ப்பிருக்கிறது. அதனால், இன்று கால்பந்து பற்றி பேச உகந்த நாள் இல்லை எனக் கூறினார்.

ஸ்பெயினில் நடைபெற்ற இரண்டாது டிவிஷன் அளவிலான கால்பந்துப் போட்டியில், எஃப்சி அன்டோரா - டெனரிஃப் அணிகள் மோதின. இதில் போட்டியின் இறுதிக் கட்டத்தில் டெனரிஃப் அணியின் முன்கள வீரர் ஜீசஸ் டி மிகைல் பந்தை விரட்டிக் கொண்டு வேகமாக ஓடினார்.

எதிரணியின் கோல்கீப்பரான ஜீசஸ் ஓவோனோவால் பந்தைத் தடுக்க மைதானத்தின் நடுப்பகுதிக்கு ஓடிவந்த நிலையில், இருவரும் அதிவேகமாக மோதியதில் ஜீசஸ் டி மிகுவல் மயங்கி விழுந்து, சிகிச்சை பலனிறி உயிரிழ்ந்தார்.

summary

Raphinha after his brace against Aston Villa: Raphinha dedicates 'Man of the Match' award to a Jesus de Miguel footballer!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.