முகமது சிராஜ் இந்தியாவை எப்போதும் ஏமாற்றியது இல்லை..! முன்னாள் வீரர் ஆதரவு!
முதல் டெஸ்ட்டில் இந்திய அணியில் முகமது சிராஜ் இல்லாதது பற்றி முன்னாள் வீரர் பேசியிருப்பதாவது...
முதல் டெஸ்ட்டில் இந்திய அணியில் முகமது சிராஜ் இல்லாதது பற்றி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், “சிராஜ் எப்போதும் இந்தியாவை ஏமாற்றியதில்லை; அவரை அணியில் எடுக்காதது ஆச்சரியம் அளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.
வெலிங்டனில் தொடங்கிய நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீசியது. முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 243/5 ரன்கள் எடுத்துள்ளது.
Advertisement
Advertisement
முகமது சிராஜ் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யூடிசி) சுற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்தும் இந்திய அணியில் இடம்பெறாதது கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
முன்னாள் வீரர்கள் பலரும் சிராஜ் இல்லாதது தவறான முடிவு என்று விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் வர்ணனையாளரும் முன்னாள் வீரருமான சுனில் கவாஸ்கர் கூறியிருப்பதாவது:
முன்னதாக அவர் கடைசி ஒருநாள் போட்டியில் பங்கேற்பார் எனவும் முதல் டெஸ்ட்டில் விளையாட மாட்டார் எனவும் அறிகுறிகள் இருந்தன. ஆனால், இந்த முடிவு ஆச்சரியம் அளிக்கிறது. சிராஜ் இந்தியாவை ஏமாற்றுவார் என நான் நினைக்கவில்லை. அவர் எப்போதுமே இந்தியாவை ஏமாற்றியதில்லை.
சிராஜ் பந்துவீச்சில் எந்தப் பிரச்னையும் இல்லை. சமீபத்தில் அவரது விளையாட்டில் நல்ல ரிதம் இருக்கிறது. அவரை ஏன் தேர்வு செய்யவில்லை என்று எனக்குப் புரியவில்லை. அவருக்கு மாற்றாக எடுக்கப்பட்டவர்கள், அதற்கேற்ப நன்றாக விளையாட வேண்டும் என்றார்.