டபிள்யூடிசி: அதிக விக்கெட்டுகள் எடுத்தும் முகமது சிராஜ் புறக்கணிக்கப்படுவது ஏன்?
இந்திய டெஸ்ட் அணியில் அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ள முகமது சிராஜ் புறக்கணிக்கப்படுவது குறித்து...
இந்திய டெஸ்ட் அணியில் அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ள முகமது சிராஜ் புறக்கணிக்கப்படுவது சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றன.
செகந்திராபாதைச் சேர்ந்த 32 வயதான வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யூடிசி) சுற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்தும் இந்திய அணியில் இடம்பெறாதது கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
பும்ரா, பிரசித் கிருஷ்ணாவை விடவும் அதிகமான விக்கெட்டுகள் எடுத்துள்ள முகமது சிராஜ் தேர்வு செய்யப்படாதது பேசுபொருளாகி வருகிறது.
நடப்பு டபிள்யூடிசி சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்தியர்கள்
1. முகமது சிராஜ் - 43 விக்கெட்டுகள்
2. ரவீந்திர ஜடேஜா - 33 விக்கெட்டுகள்
3. ஜஸ்ப்ரீத் பும்ரா - 33 விக்கெட்டுகள்
4. குல்தீப் யாதவ் - 21 விக்கெட்டுகள்
5. பிரசித் கிருஷ்ணா - 21 விக்கெட்டுகள்
இதில் டாப் 2வில் இடம் பிடித்த இருவருமே பிளேயிங் லெவனில் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக முகமது சிராஜ் இல்லாதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீசியது. முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 243/5 ரன்கள் எடுத்துள்ளது.